search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலில்"

    • ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    • ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாட்னாவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்கம் முன்பதிவில்லா பெட்டி உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது.

    சேலம்:

    கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து, சேலம் வழியாக திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் திருப்பதி- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22615) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது. அதன்படி ஒரு ஏ.சி., சேர்கார் பெட்டி, 2-ம் வகுப்பு பெட்டி, பொதுப்பெட்டி, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டி களுடன் இயக்கப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி வசந்தா (72).

    நேற்று முன்தினம் வசந்தா தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து எச்.1 என்ற குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார்.

    இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலில் இருந்து இறங்கி பெருந்துறை கிளம்பி சென்று விட்டனர்.

    வீட்டிற்கு சென்ற பிறகு வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதன் பிறகு தான் வசந்தா தான் அணிந்திருந்த நகையை ரெயிலில் விட்டு வந்தது பெரிய வந்தது. இது குறித்து அவர் உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைன் 182-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், ரகுவரன் தலைமையில் போலீசார் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் பயணம் செய்த எச் 1 பெட்டியை சோதனையை செய்தனர்.

    அதில் வசந்தா பயணம் செய்த படுக்கையின் கீழ் பகுதியில் செயின் இருந்தது தெரியவந்தது. செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இது குறித்து வசந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக வசந்தாவின் மருமகன் ஸ்ரீதரன் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து நகையை பெற்றுக் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    • ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
    • ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை போலீசார் லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நிலையத்திற்கு சென்னை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமின்றி கேரளா, பெங்களூர், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி ரெயில்கள் வந்து செல்கின்றன.ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று வழக்கம்போல ரெயில்வே நிலைய குற்றப்பிரிவு ஏட்டு ரமேஷ், மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-ம் எண் நடை மேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் மெதுவாக செல்வதை பார்த்ததும், ரெயில் மெதுவாக தானே செல்கிறது. இறங்கி விடுவோம் என நினைத்து இறங்குவதற்கு முற்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கீழே இறங்கும் போது அந்த நபர் கால்தடுமாறி, நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்து விட்டார்.இதை அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களான ரமேஷ், மாரித்து, அருண்ஜித், மினி ஆகியோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சக பயணிகள் உதவியோடு ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிவகுமார் என்பதும் , இவர் வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்று விட்டு, கோவைக்கு ரெயிலில் வந்ததும் தெரியவந்தது.ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தண்டவாளத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கிய நபரை தங்களது உயிரையும் துச்சமென மதித்து மீட்ட மீட்டு ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • ஈரோடு ரெயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    வடமாநி லங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில்ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர்.

    இதையடுத்து ஈரோடுரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடுரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடுரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

    அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியை சேர்ந்த பவதுல்லா (23) என தெரிய வந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்க சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவை சேர்ந்தவர்கள் 2 பேர் கைது செய்தனர்.
    • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அசோகன், சக்திவேல், ஸ்ரீநாத் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது எஸ்.7 பெட்டி கழிவறை அருகே கிடந்த பேக்கில் 9 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பையை ஒடிசாவை சேர்ந்த கவுங்கா மாலிக் (வயது 22), ராணா (22 ஆகியோர் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் உள்ள செங்கப்பள்ளி என்ற ஊரில் தனியார் குளிர்பான கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருவதாகவும் கடந்த 21- தேதி திருப்பூரிலிருந்து ஊருக்கு சென்று விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று அருகில் உள்ள கெந்தகூடா என்ற ஊரில் 1 கிலோ கஞ்சா ரூ.3,500 என்ற விலையில் சுமார் 9 கிலோ வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் பாலாங்கீர் என்ற ஊரில் இருந்து திருப்பூருக்கு சென்று தாங்களே சிறு சிறு பொட்டலமாக கட்டி 200-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×