என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக சென்ற ரெயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்
- ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
- ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாட்னாவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்கம் முன்பதிவில்லா பெட்டி உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






