search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்காளம்"

    • ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
    • அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை

    கொல்கத்தா:

    நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.

    • இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
    • புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்

    புதுடெல்லி:

    மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானதும், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார்.

    • கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
    • வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வைரலாகி வருகின்றன.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து பாஜக சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தடுப்புகளை மீறி பாஜகவினர் முன்னேறியதால், கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அதேபோல், தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெண் காவலரைப் பார்த்து பேசிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'என்னை தொடாதீர்கள், நீங்கள் பெண், நான் ஆண்' என சுவேந்து அதிகாரி பேசும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டரில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளது.

    போலீஸ் வேனில் அழைத்துச் செல்ல முயன்ற பெண் காவலரிடம் சுவேந்து இவ்வாறு பேசியதாக தெரிகிறது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று கூறும் அவர் ஆண் காவலரை அழைக்கிறார். அதன்பின்னர் மூத்த அதிகாரி ஒருவர் வந்து சுவேந்துவை வேனுக்கு அழைத்து சென்றார். 

    • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது
    • தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

    வன்முறையின்போது போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
    • உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி.

    மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்ட மல்லர்பூர் காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.

    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன்னில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners

    கொல்கத்தா:

    ராஜஸ்தானில் சமீபத்தில் பாகிஸ்தான் கைதி சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சிறையில் சாதாரண பாதுகாப்பில் இருந்த அவர்கள் உயர் பாதுகாப்பு கொண்ட செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் பாகிஸ்தான் கைதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners

    மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 10 பேர் அடங்கிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Womanmolested
    கொல்கத்தா :

    மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண், தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஒரு கும்பல் தவறான வார்த்தைகளில் தன்னிடம் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த மெட்ரோ ரெயில் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில் எஸ்ப்லாண்ட் ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ரெயிலில் ஏறியுள்ளனர். யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது மட்டுமல்லாமல் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

    பின்னர் மகானாயக் ரெயில் நிலையத்தில் அந்த பெண் ரெயிலை விட்டு இறங்கிய பின்னரும் அவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர், அந்த 10 பேர் மீதும் ஐ.பி.சி பிரிவு  354, 354பி, 509-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். #Womanmolested
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் லிட்டருக்கு ரூ.1 குறைத்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #MamataBanerjee
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சாமானியர்களின் கழுத்தை நெறிக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. 

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறும் நிலையில் அரசு உள்ளது.

    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மாநில அரசுகள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் இதனை ஏற்க மறுக்கிறது. மேலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, இன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
    மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து 14 பச்சிளங்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
    கொல்கத்தா :

    மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தாவின் புறநகர் பகுதியான ஹரிதேப்பூரில்  14 பச்சிளங்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹரிதேப்பூர் பகுதியில் ராஜா ராம்மோகன் ராய் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுத்தம் செய்யும் செய்யும் பணிகள் நடைபெற்றபோது குழந்தைகளின் சடலங்கள் கண்டுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஹரிதேப்பூர் காவல் நிலைய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ கண்டுக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையிலும், சில குழந்தைகளின் உடல்கள் பாதி அழுகிய நிலையிலும் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் விரைந்து சென்று அப்பகுதியை பார்வையிட்டனர்.
    பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும் பாட புத்தகத்தில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக அவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
    கொல்கத்தா:

    பிரபல ஓட்டபந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. புகழ்பெற்ற நடிகர் பர்ஹான் அக்தர் இந்த திரைப்படத்தில் மில்கா சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பள்ளி பாட புத்தகத்தில், மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக, நடிகர் பர்ஹான் அக்தரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, இந்த புகைப்படத்தை மாற்றி அமைக்குமாறு மேற்கு வங்காள கல்வி துறைக்கு நடிகர் பர்ஹான் அக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடகள வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் பர்ஹானின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதால் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் எழுத்துள்ளன.


    14 வயது சிறுமியின் தொண்டையில் உணவுக்குழாயை சுற்றி இருந்த 9 ஊசிகளை மருத்துவர்கள் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடும் தொண்டை வலி காரணமாக கடந்த திங்கள் அன்று அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்பேச முடியாமல் இருந்த அந்த சிறுமியின் தொண்டை பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தொண்டையில் உணவுக்குழாயை சுற்றிலும் 9 ஊசிகள் இருந்துள்ளன. இதனை அடுத்து, சுமார் 4 மணி நேரம் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை வெளியே எடுத்து சிறுமியை காப்பாற்றினர். எனினும், ஊசி எப்படி தொண்டைக்குள் சென்றது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

    சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்த தகவலும் கூற மறுக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விளையாட்டுத்தனமாக அந்த சிறுமி ஊசியை விழுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
    மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்க்ளா’ என மாற்றம் செய்து அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட வங்காளம், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின் மேற்கு வங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் பங்களாதேஷ் என தனிநாடாக மாறியது.

    மேற்கு வங்காளத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என வருவதால், ஆங்கில அகரவரிசைப்படி மத்திய அரசு கூட்டங்களில் கடைசி இடத்தில் மேற்கு வங்காளத்தின் பிரதிநிதிகள் அமர வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியால் நீண்ட காலமாக கூறப்பட்டது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களிலும் தங்களது சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பேச கடைசியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறி வந்தார்.



    வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்றப்படும் என அவர் 2011-ம் ஆண்டே அறிவித்தார். அறிவித்த கையோடு, அம்மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.

    இந்நிலையில், மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்க்ளா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    ஆனால், மத்திய அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் என்று கூறப்படுகிறது.
    ×