search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "text book"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
    • கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றுள்ளது.

    சென்னை:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

    இந்நிலையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் "பன்முகக் கலைஞர்" என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

     

    குழந்தை உள்ளக் கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றுள்ளது.

    மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. #Gaja
    சென்னை:

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் பாட புத்தகங்கள் மழை தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் அரசு பாட நூல் கழகம் இலவசமாக வழங்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் பாட புத்தகங்களை இழந்தவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நாகப்பட்டினத்துக்கு 1 லட்சத்து 57 ஆயிரத்து 485, தஞ்சாவூருக்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 175, திருவாரூருக்கு 55 ஆயிரத்து 391, புதுக்கோட்டைக்கு 21 ஆயிரத்து 7 உள்பட 3 லட்சத்து 95 ஆயிரத்து 78 புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வளவு புத்தகங்கள் தேவை என்றாலும் வழங்க தயாராக இருக்கிறோம். போதுமான அளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும் பாட புத்தகத்தில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக அவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
    கொல்கத்தா:

    பிரபல ஓட்டபந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. புகழ்பெற்ற நடிகர் பர்ஹான் அக்தர் இந்த திரைப்படத்தில் மில்கா சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பள்ளி பாட புத்தகத்தில், மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக, நடிகர் பர்ஹான் அக்தரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, இந்த புகைப்படத்தை மாற்றி அமைக்குமாறு மேற்கு வங்காள கல்வி துறைக்கு நடிகர் பர்ஹான் அக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடகள வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் பர்ஹானின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதால் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் எழுத்துள்ளன.


    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #Rajasthan
    சென்னை:

    ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கில பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதிகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்.


    ஆனால், வார்த்தை சிக்கல் காரணமாக அவரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
    ×