என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

மேல கை வைக்காதீங்க... நான் ஆம்பள... பாஜக தலைவர் பேசியதை கிண்டலடித்த திரிணாமுல் காங்கிரஸ்

- கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
- வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வைரலாகி வருகின்றன.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து பாஜக சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தடுப்புகளை மீறி பாஜகவினர் முன்னேறியதால், கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல், தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெண் காவலரைப் பார்த்து பேசிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'என்னை தொடாதீர்கள், நீங்கள் பெண், நான் ஆண்' என சுவேந்து அதிகாரி பேசும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டரில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளது.
போலீஸ் வேனில் அழைத்துச் செல்ல முயன்ற பெண் காவலரிடம் சுவேந்து இவ்வாறு பேசியதாக தெரிகிறது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று கூறும் அவர் ஆண் காவலரை அழைக்கிறார். அதன்பின்னர் மூத்த அதிகாரி ஒருவர் வந்து சுவேந்துவை வேனுக்கு அழைத்து சென்றார்.