search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள்"

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

    என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பொங்கலூர் வெங்கிடுபதி கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா வருகிற 24 மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது. 100-வது ஆண்டை நிறைவு செய்கிற பள்ளியாக உள்ள இந்த பள்ளி 1890 -ம் ஆண்டு திண்ணை பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டது. 1923-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக மலர்ந்தது. பின்னர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசு வேலையில் உள்ளவர்களாகவும் உள்ளனர். தற்போது 100 வயதை நெருங்கி உள்ள இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இதை ஒரு விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 80 ஆண்டு கால மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணக்கம் பொங்கலூர் என்ற தலைப்பில் இதை விழாவாக முன்னெடுத்துள்ளனர்.

    முதல் நாள் 24-ந் தேதி முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பட்டிமன்றம் மற்றும் கும்மியாட்டமும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை மாரத்தான் போட்டியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியும், ஆசிரியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.

    • பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வகுப்பறை கட்டிடம் : இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:- 1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை ,அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்து ள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூட வும் செய்யப்பட்டு விட்டன.

    பொதுத்தேர்வில் தேர்ச்சி : ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுது களாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்க பலமாக உள்ளனர் என்றார். 

    • அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.
    • போதிய வகுப்பறை இல்லை என்பதை அறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.

    இதையடுத்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:-

    1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்துள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூடவும் செய்யப்பட்டு விட்டன.

    ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுதுகளாக வளர்ந்து நிற்கிறது.

    நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்கபலமாக உள்ளனர் என்றார்.

    • காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1993 முதல் 1996 வரை தாவரவியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தாவரவியல் துறை தலைவர் முனைவர் கோமளவள்ளி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தனர். குவைத், சிங்கப்பூர், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், பசுமை நிறைந்த நினைவுகளையும் ெதரிவித்தனர்.

    துறை தலைவர் மற்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் வள்ளல் அழகப்பர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் வரும் காலங்களில் தாவரவியல் துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன், ஐங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மலையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலைய பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் ராமலிங்கம், குருசாமி, சரோஜா, பழனிசாமி, மலர்ச்செல்வி, ஆறுமுகம், ருத்ரமூர்த்தி, உமாமகேஸ்வரி, பத்மா, சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிபடுத்திக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    • இந்த வருடம் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.
    • தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் அமைந்துள்ள போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில்1983-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மற்றும் 1978 முதல் 1983 -ம் ஆண்டு வரை அதே பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இருப்பிடம் மற்றும் தொலைபேசி நம்பர்களை திரட்டி ஒன்றாக வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அதன் மூலம் பல தகவல்களை பெற்று பல ஊர்களில் பிரிந்து இருக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து கடந்த மே மாதம் வால்பாறையில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த வருடம் 40 -ம் ஆண்டில் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாண்டிச்சேரி, சேலம், கோவை, நாகப்பட்டினம், ஆத்தூர், புதுக்கோட்டை, மதுரை, வால்பாறை, சோளிங்கர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சிவத்தையாபுரம், சேர்வைக்காரன் மடம், ஆறுமுக மங்கலம், குமாரபுரம் சிவஞானபுரம், சாயர்புரம், தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சில் சிறப்பு விருந்தினர்களாக கற்பித்த ஆசிரியர்கள் மார்ட்டின், தங்கராஜ், சாமுவேல் ராஜ், ஜேக்கப் டேவிட், ராஜ்குமார் அகதாஸ், டேவிட் சாமுவேல், ராமச்சந்திரன், விக்டர், தனசிங் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் ஒவ்வொருவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சாம்ராஜ் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 1994-97-ம் ஆண்டில் வனிகவியல்துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் 300 மரக்கன்றுகளை நட்டனர். இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் பேராசிரியர்களின் கல்லூரிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பி.ஜி. குரூப் ஆப் சிங்கப்பூர், ஜே.பி.குரூப் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பாலமுருகன், ஆசிரியர் பாண்டியராஜன், நடேஷ், ராமசந்திரன், ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வத்தலக்குண்டுவில் 32 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர்.
    • மேலும் பள்ளிக்கு ரூ.2லட்சம் நிதி உதவி வழங்கினர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு - மதுரை மெயின் ரோட்டில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த 58 மாணவர்கள் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து கலந்து பேசி வந்தனர். இடையில் உயிரிழந்த ஒரு மாணவரின் மனைவிக்கு கடை வைத்து கொடுத்தனர். இறந்த மற்றொரு மாணவனின் மகளுக்கு வங்கியில் ரூ. 50,000 வைப்புத் தொகை செலுத்தினர்.

    அதேபோல மாற்று த்திறனாளி மாணவர் ஒருவருக்கு 10 ஆடுகள் வாங்கி கொடுத்து வாழ்வில் உயர வழி செய்தனர். இந்நிலையில் தாங்கள் படித்த பள்ளியில் குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 32 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் கூடினர். தேவாலய பங்குத்தந்தை, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று மகிழ்ந்தனர். பின்னர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் அமைத்துக் கொடுத்த ஆழ்துளை கிணறுக்கான கல்வெட்டை மூத்த ஆசிரியர் ஒருவர் திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் மாணவ ர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தினர். இது குறித்து பள்ளி முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இது முடி வல்ல. ஆரம்பம்தான். இனி தொடர்ந்து பள்ளி க்கும் உடன்படித்த மாணவ ர்களுக்கும் எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் என்றனர்.

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    ×