search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா -  2 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா - 2 நாட்கள் நடக்கிறது

    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பொங்கலூர் வெங்கிடுபதி கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா வருகிற 24 மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது. 100-வது ஆண்டை நிறைவு செய்கிற பள்ளியாக உள்ள இந்த பள்ளி 1890 -ம் ஆண்டு திண்ணை பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டது. 1923-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக மலர்ந்தது. பின்னர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசு வேலையில் உள்ளவர்களாகவும் உள்ளனர். தற்போது 100 வயதை நெருங்கி உள்ள இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இதை ஒரு விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 80 ஆண்டு கால மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணக்கம் பொங்கலூர் என்ற தலைப்பில் இதை விழாவாக முன்னெடுத்துள்ளனர்.

    முதல் நாள் 24-ந் தேதி முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பட்டிமன்றம் மற்றும் கும்மியாட்டமும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை மாரத்தான் போட்டியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியும், ஆசிரியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளனர்.

    Next Story
    ×