search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்கள்
    X

    32 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பள்ளிக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

    • வத்தலக்குண்டுவில் 32 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர்.
    • மேலும் பள்ளிக்கு ரூ.2லட்சம் நிதி உதவி வழங்கினர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு - மதுரை மெயின் ரோட்டில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த 58 மாணவர்கள் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து கலந்து பேசி வந்தனர். இடையில் உயிரிழந்த ஒரு மாணவரின் மனைவிக்கு கடை வைத்து கொடுத்தனர். இறந்த மற்றொரு மாணவனின் மகளுக்கு வங்கியில் ரூ. 50,000 வைப்புத் தொகை செலுத்தினர்.

    அதேபோல மாற்று த்திறனாளி மாணவர் ஒருவருக்கு 10 ஆடுகள் வாங்கி கொடுத்து வாழ்வில் உயர வழி செய்தனர். இந்நிலையில் தாங்கள் படித்த பள்ளியில் குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 32 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் கூடினர். தேவாலய பங்குத்தந்தை, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று மகிழ்ந்தனர். பின்னர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் அமைத்துக் கொடுத்த ஆழ்துளை கிணறுக்கான கல்வெட்டை மூத்த ஆசிரியர் ஒருவர் திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் மாணவ ர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தினர். இது குறித்து பள்ளி முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இது முடி வல்ல. ஆரம்பம்தான். இனி தொடர்ந்து பள்ளி க்கும் உடன்படித்த மாணவ ர்களுக்கும் எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் என்றனர்.

    Next Story
    ×