search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கம்பம்"

    • மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
    • மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.

    அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்

    • கீழக்கரையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இருந்த மின் கம்பத்ைத அகற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும். கீழக்கரை முக்கு ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கொண்டு இருக்கிறது. அந்த மின்கம்பத்தில் மின்சாரம் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கீழக்கரையில் தெருக்களில் ஆங்காங்கே மின்சார வயர்கள் பொதுமக்கள் தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை உயரத்தில் கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு கொடுக்கும் நிகழ்வில் நகர செயலாளர் காதர், துணைத்தலைவர்கள் சுல்தான், சிக்கந்தர், ரீகான் செயற்குழு உறுப்பினர்கள் ஜலீல், ராஜா, சித்திக், அஸ்ரப் மற்றும் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன.
    • கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகே உயர் அழுத்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    போக்குவரத்து மிகுந்த சாலை என்பதாலும் அருகில் சிறிய மின்கம்பங்கள் இருப்பதாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த சாலையில் மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'கள் சாலை நடுவே நின்றிருந்த நிலையில் அதனை மாற்றி அமைக்காமல் அப்படியே புதிய சாலை அமைக்கப்பட்டதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையின் நடுவே அச்சுறுத்தும் வண்ணம் நிற்கும் மின்கம்பங்களின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம்.
    • பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் இருந்து பெரியகாங்கேயன்பட்டி வரை உள்ள சாலை விரிவா–க்கப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன.8 கி.மீ நீளமுள்ள இந்த சாலை முழுவதும் கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காகவும், வேளாண் விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.புதிதாகவிரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மின்சார வாரியத்திடம் கோரிக்கை எழுப்பினால் மின்சார வாரியம் உடனடியாக செய்து தருவதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    அதை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை மின்சார வாரியத்தால் கவனிக்க–ப்படாமல் அப்படியே உள்ளது. இதுமட்டும் இல்லாமல் சாலை பணிகளுக்காக அகற்றி நட வேண்டிய ஒருமின்கம்பம் நடப்படாததால் அந்த மின் கம்பத்தை சுற்றி தார் சாலை போடப்ப–ட்டுள்ளது.இதனால் எதிரெதிரே 2 வாகனங்கள் வரும்பொழுது மின்கம்பத்தில் மோதக்கூடிய சூழ்நிலை உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    பலமுறை மின்சார வாரிய அலுவலர்களுக்கு மின்கம்ப–ங்கள் குறித்தும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையோரம் நட வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கை விடுத்து உடைந்த மின் கம்பத்தை மாற்றியும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரத்தில் நட்டு பொதுமக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

    • மின்கம்பம் 2 துண்டாக முறிந்தது
    • போலீசார் காரை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று இரவு 9 மணி அளவில் காரில் புறப்பட்டுள் ளார். அவர் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்றார். நாகர்கோவில் நோக்கி அந்தக் கார் சென்றுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார், மேல சங்கரன்குழி சந்திப்பில் இருந்த மின்கம்ப த்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சேத மடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது. இதற்கிடையில் காரை ஒட்டி வந்தவர் சிறுகா யங்களுடன் தப்பி ஒடி விட்டார். போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    • பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்த த்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கணபதிபுரம் மெயின் சாலை வழியே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கணபதி புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கணபதி புரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது.இந்த மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலை ப்பள்ளி உள்ளி ட்டவைகள் இருப்பதால் பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் அதிகளவில் வந்து செல்வதாலும் காரைக்கால் பூந்தோட்டம் மெயின் சாலை என்பதாலும் மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்அளி த்தும் இதுவரைஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது.
    • காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தெரு விளக்கு சிமெண்டில் ஆன மின் கம்பங்கள் காரைகள் பெயர்ந்து கம்பிகளில் தாங்கிப் பிடித்துள்ளது. இதேபோல பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக நாகை அருகே பழைய நாகூர் ரோட்டில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது, அதிவேக காற்று அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல வெளிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் வாசலில் ஒரு மின் கம்பம், மேலும் இளஞ்சேரன் நகர் பகுதியில் தெரு விளக்கு மின் கம்பம் சாய்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீடுகளின் மேல் விழும் அபாயத்தில் உள்ளது

    இப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்களே ஏறமறுக்கும் அவல நிலை உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் 2 நாட்கள், ஒரு வாரம், இதோ, அதோ என காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    அதற்கு முன் விபத்து ஏற்பட்டால் முழு பொறுப்பையும் மின்வாரிய அதிகாரிகள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×