search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை அருகே சேதமான மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும்
    X

    சேதமான மின்கம்பங்கள்

    நாகை அருகே சேதமான மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும்

    • மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது.
    • காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தெரு விளக்கு சிமெண்டில் ஆன மின் கம்பங்கள் காரைகள் பெயர்ந்து கம்பிகளில் தாங்கிப் பிடித்துள்ளது. இதேபோல பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக நாகை அருகே பழைய நாகூர் ரோட்டில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது, அதிவேக காற்று அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல வெளிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் வாசலில் ஒரு மின் கம்பம், மேலும் இளஞ்சேரன் நகர் பகுதியில் தெரு விளக்கு மின் கம்பம் சாய்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீடுகளின் மேல் விழும் அபாயத்தில் உள்ளது

    இப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்களே ஏறமறுக்கும் அவல நிலை உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் 2 நாட்கள், ஒரு வாரம், இதோ, அதோ என காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    அதற்கு முன் விபத்து ஏற்பட்டால் முழு பொறுப்பையும் மின்வாரிய அதிகாரிகள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×