search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் அருகே கணபதிபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
    X

    ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம். 

    திருமருகல் அருகே கணபதிபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்

    • பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்த த்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கணபதிபுரம் மெயின் சாலை வழியே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கணபதி புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கணபதி புரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது.இந்த மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலை ப்பள்ளி உள்ளி ட்டவைகள் இருப்பதால் பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் அதிகளவில் வந்து செல்வதாலும் காரைக்கால் பூந்தோட்டம் மெயின் சாலை என்பதாலும் மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்அளி த்தும் இதுவரைஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×