என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல சங்கரன்குழியில் கார் மோதியதில் மின் கம்பம் சேதம்
- மின்கம்பம் 2 துண்டாக முறிந்தது
- போலீசார் காரை கைப்பற்றி விசாரணை
கன்னியாகுமரி:
மணவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று இரவு 9 மணி அளவில் காரில் புறப்பட்டுள் ளார். அவர் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்றார். நாகர்கோவில் நோக்கி அந்தக் கார் சென்றுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார், மேல சங்கரன்குழி சந்திப்பில் இருந்த மின்கம்ப த்தில் மோதியது.
இதில் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சேத மடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது. இதற்கிடையில் காரை ஒட்டி வந்தவர் சிறுகா யங்களுடன் தப்பி ஒடி விட்டார். போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Next Story






