search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் சாவு"

    • செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பட்டர் பிளை மேம்பாலம் முகப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

    தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
    • இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்தவர் இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று அந்த நிறுவனத்திற்கு சென்ற அவர் இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த சக பயணிகள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிநீர் வாரிய ஊழியர் படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே குன்னூர் வள்ளல்நதி கூட்டுகுடிநீர் திட்ட தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் பெரியசாமி(48). இவருக்கு திருமணமாகவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் வைகையாற்று கிழக்குகரை பகுதியில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தண்ணீர் திறந்துவிடும் பணி மேற்கொண்டு வந்தார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் போஜம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேல்பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சந்தூர் கூட்ரோடு இ.பி. டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார்.
    • அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கூச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோகுல் (வயது29). இவருக்கு திருமணமாகி வைஷாலி என்ற மனைவி உள்ளார்.

    இவர் ஓசூர் அரசனட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் அரசனட்டியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்ற கோகுல், அங்குள்ள ஒரு கட்டிங் மிசின் பழுதாகி நீண்டநாட்களாக செயல்படாமல் கிடந்ததை பார்வையிட சென்றார். அப்போது அந்த மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார். இதில் அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வைஷாலி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் தனது கணவருக்கு சாவுக்கு காரணமானவர்கள் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பழகன், மேலாளர் ஜெகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 வருடங்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கநேரி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). இவர் பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு திருமணமாகி இந்திராணி என்கிற மனைவியும்,3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.காமராஜ் கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் காமராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப் பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அவரது மகன் ஹரிஹரன் சிகிச்சைக் காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது தாய் சாந்தா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலியன் ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார்.
    • கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் குருபீடபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 45). இவர் எலவனசூர்கோட்டை அருகே கொட்டயூர் பகுதியில் உள்ள ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது. இதில் அலறி கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பணியாளர்கள் கலியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கலியனின் உறவினர்கள் கொட்டயூர் பகுதியில் உள்ள கல்குவாரி கம்பெனி முன்பு திரண்டனர். இறந்த கலியனிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதனால் கலியன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தனிப்பிரிவு ேபாலீசார் சுரேஷ் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட கலியன் உறவினர்களிடம் இறந்த கலியன் குடும்பத்திற்கு உரிய முறையில் இழப்பீட்டு தொகை வாங்கி தரப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை முன்னிட்டு கம்பெனியின் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் கலியன் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகையிட்ட கலியன் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    நேற்று கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் நேற்று பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் உள்ள அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினார். பின்னர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு துறையி னருக்கும் தகவல் கொடுத் துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுழலில் சிக்கி ராஜவாய்க் காலில் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
    • மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.

    அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்

    • அவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமானது.
    • தேவன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது47). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா. இவர் மொரப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தேவனின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த மன வேதனையில் தேவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதில் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமானது.

    கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய தாயார் இறந்து 5 மாதம் முடிந்த நிலையில் ஆற்றங்கரையில் துணி வைத்து படைத்து காரிய சடங்கு செய்தனர்.

    இதனையடுத்து வீட்டிற்கு சென்ற தேவனுக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மன வேதனையடைந்த தேவன் தன் சொந்த ஊரான ஜடையம்பட்டிக்கு வந்தார். அங்கு வீட்டின் உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

    சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தேவன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    உடனே இவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் மனைக்கு எடுத்து சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்தை சேர்ந்த வர் காத்தவராயன் மகன் ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் தினந்தோறும் பேரணியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூல மாக வேலைக்கு சென்று விட்டு திரும்பி பேரணி கிரா மத்துக்கு செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழுதா வூரில் நடைபெற்ற தனது நண்பர் விசேஷத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் மூலமாக பேரணி நோக்கி சென்று கொண்டி ருந்தார்,

    விக்கிரவாண்டி போலீஸ் கோட்டர்ஸ் அருகே செல்லும் பொழுது முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சென்றவர் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஜெயபாலுக்கு சாந்தி என்ற மனைவியும் சக்தி என்ற மகளும் உள்ளனர்.

    • ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்
    • போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×