search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மருத்துவமனை ஊழியர் சாவு
    X

    அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மருத்துவமனை ஊழியர் சாவு

    • 20 வருடங்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கநேரி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). இவர் பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு திருமணமாகி இந்திராணி என்கிற மனைவியும்,3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.காமராஜ் கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் காமராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப் பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அவரது மகன் ஹரிஹரன் சிகிச்சைக் காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது தாய் சாந்தா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×