மேச்சேரி அருகே ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
மேச்சேரி அருகே ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன  ஊழியர் சாவு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்தவர் இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று அந்த நிறுவனத்திற்கு சென்ற அவர் இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக பயணிகள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com