search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

    இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திகழும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பார்வையிட்டார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர்முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம்.

    வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகா தாரமான முறையில் 2 ஸ்லேட்டர்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது.

    ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கலிடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் பக்தர்களுக்கு அதிக விலையில் பொரு ட்களை விற்கின்றார் என்ற நிலை இல்லாமல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிேறாம்.

    ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்து க்கொண்ட பணிகளில் இப்போது கோவில் உள்ளே இருக்கிற உற்சவர் மண்டபம் ரூ.40 லட்சத்திலும், முடிகாணிக்கை மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கோவில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.

    அதன் அடிப்படையில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.

    • பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
    • நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .

    இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 11-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர்.

    நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று புதன்கிழமை காலை பொங்கல் விழா நடந்தது.

    பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலிகொடுத்தும், பக்திபரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பிடாரியூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.
    • பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் , பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை நடுவேலம்பாளையம் பொதுமக்கள் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்து மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .இதில் நடுவேலம்பாளையம் ,லட்சுமிநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாரியம்மன் கோவில் முத்து பல்லாக்கு நடைபெற்றது
    • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் முத்து பல்லாக்கு விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, உடம்பில் அழகு குத்தியும் கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முத்து பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மன் கருவறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை மண்டக படித்தார்கள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
    • புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சேர்வராயன் பாளையம் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் சிற்பங்கள் அனைத்தும் வர்ணங்கள் தீட்டி புது பொலிவு பெற்றது.

    இதன் பின்னர் கோவில் வளாகத்தின் முன்பாக யாகசாலை பூஜை பந்தல் அமைத்து அதில் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை யிலான சிவாச்சாரியார் குழுவினர் மூலம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    விழாவில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், தொட்டி பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கேபிள் சேகர், விழா குழுவினர் மற்றும் பவானி, காடையம்பட்டி, புது காடையம்பட்டி

    சேர்வராயன் பாளையம், தொட்டிபாளையம், பெரிய மோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய் பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது.
    • மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

     சிதம்பரம்:

    சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீ மாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோவிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

    இன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவமும், 3-ந் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர். தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பஸ்கள்இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடுமலை:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி பெருவிழா நடைபெறுவது வழக்கம் இதன்படி நாளை 22 ந்தேதி ஆடிப்பெரு விழா தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் ஆடி வெள்ளிக்கிழமையான வரும் 22ந்தேதி காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.23ந்தேதி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை ,28 ந்தேதி சர்வ ஆடி அமாவாசையை ஒட்டி அதிகாலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 29 ந்தேதி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஆகஸ்ட் 1ந்தேதி திருஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நாகசதுர்த்தி விழா நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மங்கள இசை ,4 -45 மணிக்கு அபிஷேகம் ,அலங்காரம் ,மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஆகஸ்ட் 3 -ந்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    5 ந்தேதி மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருஞானம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11 ந்தேதி ஆடி மாத பௌர்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12 ந்தேதி ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்யு.எஸ்.எஸ். ஸ்ரீதர் செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×