என் மலர்
நீங்கள் தேடியது "MARIYAMMAN KOVIL"
- மாரியம்மன் கோவில் முத்து பல்லாக்கு நடைபெற்றது
- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் முத்து பல்லாக்கு விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, உடம்பில் அழகு குத்தியும் கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முத்து பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மன் கருவறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை மண்டக படித்தார்கள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






