என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
- பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
- நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 11-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று புதன்கிழமை காலை பொங்கல் விழா நடந்தது.
பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலிகொடுத்தும், பக்திபரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பிடாரியூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.






