search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மநபர்கள்"

    • ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது
    • குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியில் கோயிக்கல் தோப்பு புனித தோமையார் ஆலயம் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் ஆலயத்தின் முன் உள்ள மாதா குருசடியில் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது மாதா சொரூபத்தில் தங்க நகைகளை அணிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது.இதனை கண்டு சந்தேக மடைந்த பெண்கள் ஆலய பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து பார்த்தபோது குருசடியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு சொரூபத்தில் அணி விக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு சவரன் தங்க சங்கிலி மற்றும் மூன்று மோதிரங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    அதே நேரத்தில் மாதாவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த தங்க பொட்டு மற்றும் தாலி சுட்டிகளை திருடர்கள் எடுத்து செல்லாமலும், குருசடியின் கீழ் உள்ள காணிக்கை பெட்டியை எடுக்காமலும் சென்றிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பங்கு தந்தை நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் வந்து குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அங்குள்ள காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    யாரோ மர்மநபர்கள் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கத்தை திருடினர்.
    • சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (வயது 35). சம்பவத்தன்று இரவில் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க வாசல் வழியாக புகுந்தனர். பின்னர் வீட்டின் ஒரு அறையில் டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3500 ரொக்கத்தை திருடினர். தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்டு முழித்த காயத்ரி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து காயத்ரி வல்லம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.
    • மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 70).

    வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் பிழைப்புகாக தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இவரிடம் 10 ஆடுகள் இருந்தன.

    பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அமுதா மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு சென்ற போது அங்கு கழுத்து முறிந்து ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் 10 ஆடுகளும் இறந்து கிடந்தன.

    இதைக்கண்டு அமுதா கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆடுகள் எப்படி இறந்தது? ஆடுகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதால் இது எப்படி நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

    மேலும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    10 ஆடுகளையும் மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஆடுகள் சாவுக்கு காரணம் என்ன? முன்விரோத செயலா? என என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை திருடப்பட்டுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ஒ.எம். ராஜீவ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61 ).

    ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், முன்பக்கம் நிறுத்திருந்த ஸ்கூட்டியை காணாதது கண்டும் அதிர்ச்சிடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி

    பானுமதி (வயது 65). பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார்.

    இதனால் வறுமையில் வாடிய பானுமதி பிழைப்பிற்காக வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

    தினமும் அதிகாலையில் மாட்டின் பாலை கறந்து இப்குதியில் உள்ள கடைகளுக்கு சென்று கொடுப்பது இவரது வழக்கம். வழக்கம் போல் இன்று காலையும் மாட்டின் பாலை கறந்து கடைக்கு கொடுப்பதற்காக கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் பானுமதியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து பானுமதி திருவோணம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் திருவோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • மர்மநபர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சோமனூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் சண்முகம். விசைதறி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45).

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.

    மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

    அவர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவரது முடியை பிடித்து மர்மநபர்கள் இழுத்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

    மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கணவன் -மனைவி இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சியில் அவரின் முடியை பிடித்து கீழே தள்ளிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீலகிரி பஞ்சாயத்து செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 38).

    இவர் தஞ்சை ரகுமான் நகரில் பித்தளை ,இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த பத்மநாதன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
    • உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40).

    இவர் மனைவி சாந்தி (38), குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று காலை மனோகரன், மனைவி சாந்தியுடன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    பின்னர், மனோகரன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தகவலறிந்த வலங்கமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு பிரிவு போலீஸ் அறிவழகன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.

    • பரிதா (வயது 36). குழந்தைகளை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் சென்றார்.
    • மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசரீப். இவரது மனைவி பரிதா (வயது 36). இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீதியில், இவர்களது குழந்தைகள் டியுஷன் படித்து வருகின்றனர்.இவர்களை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் பரிதா சென்றார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வாட்டர் டேங்க் அருகே நடந்து வந்து ெகாண்டிருந்தார். அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாகும். அப்போது பரிதாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த பரிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். மர்மநபர்களால் பறித்து செல்லப்பட்ட ஹேன்ட்பேக்கில் ரூ.5 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரிதா அளித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
    • இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.   இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருடு போய் இருந்தது.
    • இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி பரக்கத் நகரில் வசித்து வருபவர் ஹாஜிமுஹம்மது (வயது 35). இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் அவருடைய மனைவி தஸ்மிராநஸ்ரின் வடக்கு மாங்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஹாஜி முஹம்மதுவின் சகோதரர் முகமதுமகாதீர் (18) என்பவர் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதில் திருடர்கள்பீரோ உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பீரோ மற்றும் தரையின் மீது மிளகாய் பொடி தூவி, அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×