செல்போன்கள் திருடியவர் கைது

ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.
செல்போன்கள் திருடியவர் கைது
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com