search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystics"

    • பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
    • இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இருந்து பெருந்தோட்டம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தருமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

    பஸ்சில் ஓட்டுநர் கஜேந்திரன், நடத்துனர் காசிநாதன் பணியில் இருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.

    அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருடு போய் இருந்தது.
    • இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி பரக்கத் நகரில் வசித்து வருபவர் ஹாஜிமுஹம்மது (வயது 35). இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் அவருடைய மனைவி தஸ்மிராநஸ்ரின் வடக்கு மாங்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஹாஜி முஹம்மதுவின் சகோதரர் முகமதுமகாதீர் (18) என்பவர் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதில் திருடர்கள்பீரோ உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பீரோ மற்றும் தரையின் மீது மிளகாய் பொடி தூவி, அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×