தனியார் பஸ் மீது கல்வீச்சு

பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் பஸ் மீது கல்வீச்சு
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் இருந்து பெருந்தோட்டம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தருமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

பஸ்சில் ஓட்டுநர் கஜேந்திரன், நடத்துனர் காசிநாதன் பணியில் இருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com