search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வீச்சு"

    • விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தியாகராஜன் மகனும், தி.மு.க பிரமுகருமான இளையராஜாவை கடந்த 8-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த கொலை முயற்சி வழக்கில் புகழேந்தியும் உள்ளார். புகழேந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியான ஆடலரசு தம்பி ஆவார். இவர் அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி புகழேந்தி வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகழேந்தி வீட்டிற்கு வந்தது. அப்போது அந்த கும்பல் வீட்டின் முன்பு இருந்த ஆம்புலன்சை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
    • இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இருந்து பெருந்தோட்டம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தருமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

    பஸ்சில் ஓட்டுநர் கஜேந்திரன், நடத்துனர் காசிநாதன் பணியில் இருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.

    அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    திருச்சி:

    காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் ஏறி, இறங்கினர்.

    அதன் பின்னர் கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகளில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்துக்கு முன்னதாக மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது சரமாரியாக கருங்கற்களை வீசி தாக்கினர். இந்தக் கற்கள் ரெயிலின் பொதுப் பெட்டியில் வந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிதின் (வயது 30) என்ற பயணியின் நெற்றி பொட்டில் கல் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக சக பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்த போதும் ரெயில் நடுவழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக நின்றனர். பின்னர் படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் அதே ரெயிலில் ஊருக்கு புறப்பட்டுச் செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசையரசன், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதை ஆசாமிகள் கல் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஓடும் ரெயிலில் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அருகே கார், பைக் மீது கல்வீசி தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 கார் மற்றும் பைக்கை ஆர்.ஆர். மண்டபம் அருகே நிறுத்தி இருந்தனர்.

    மதுரை

    மதிச்சியம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தீபக்ஆனந்த் (32). இவருக்கு சொந்தமான 2 கார் மற்றும் பைக்கை ஆர்.ஆர். மண்டபம் அருகே நிறுத்தி இருந்தார்.

    இந்த பைக்கை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஹரி சுரேஷ் (24), மதிச்சியம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் ரூபன்குமார் (24), மதுரை மாவட்டம் பூலாங்குளம் கணபதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு (23) ஆகியோர் கல்லால் தாக்கி சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து மதிச்சியம் போலீசில் தீபக்ஆனந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ×