தி.மு.க பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட புகழேந்தி ஆம்புலன்சில் மர்ம நபர்கள் கல்வீச்சு

விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார்.
கல்லால் தாக்கி உடைக்கப்பட்ட காரை படத்தில் காணலாம்.
கல்லால் தாக்கி உடைக்கப்பட்ட காரை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தியாகராஜன் மகனும், தி.மு.க பிரமுகருமான இளையராஜாவை கடந்த 8-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த கொலை முயற்சி வழக்கில் புகழேந்தியும் உள்ளார். புகழேந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியான ஆடலரசு தம்பி ஆவார். இவர் அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி புகழேந்தி வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகழேந்தி வீட்டிற்கு வந்தது. அப்போது அந்த கும்பல் வீட்டின் முன்பு இருந்த ஆம்புலன்சை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com