சேலம் அருகே ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர் யார்?

ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர்.
சேலம் அருகே ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர் யார்?
Published on

சேலம்:

கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டி ருந்தது.

அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ரெயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.

அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மந பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கல்வீச்சு நடந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com