search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்"

    • சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
    • கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய கேபினெட் அமைச்சராக உள்ளார்

    சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

    உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது.

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய 'ஜல் சக்தி' மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.

    நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அதில் அவர் கூறியதாவது:-

    உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.

    இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார்.

    உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்.

    • மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார்.
    • குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி, தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் திருப்பூரில் பி.எப்., மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது திருப்பூர் - பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே, சிறிய வாடகை கட்டிடத்தில் மாவட்ட பி.எப்., அலுவலகம் செயல்ப டுகிறது. மண்டல அலுவலக த்தை செயல்படுத்து வதற்காக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:-

    தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருப்பூரில் மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்க ப்படுகிறது. தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளை திருப்பூர் மண்டலத்துடன் சேர்க்க கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. வரும் 27ல், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார். அப்போது, மண்டலத்துடன் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் வெளியிடப்படும்.மண்டல அலுவலகம் அமைவதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் கணக்குகள் திருப்பூரிலேயே நிர்வகிக்கப்படும். கடன் வழங்கல், ஓய்வூதியம் வழங்கல் பணிகளும் இங்கிருந்தே மேற்கொ ள்ளப்படும்.குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி. தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேற்கு பல்லடம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
    • மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.பி. சீனிவாசன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், தென்னை உற்பத்தியாளர்கள், விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாஜக., பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் மேற்கு பல்லடம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அப்போது பல்லடம் நகராட்சி தேர்தலில் பா.ஜ.க.சார்பில் வெற்றி பெற்ற சசிகலா ரமேஷ், ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோரை சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி 7வது வார்டு உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் (அதிமுக) பல்லடத்தில் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க மேம்பாலம் அமைத்துத் தரும்படி கோரிக்கை மனு அளித்தார்.

    இதேபோல சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை பல்லடத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் ஆதி திராவிடர் ஈஸ்வரி செல்வராஜ் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சிகளில், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி தர்மராஜ் , விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.பி. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொள்கிறார்.
    • பல்வேறு நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

    தமது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.

    மேலும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஆயுர்வேத சிகிச்சை நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

    7வது ஆயுர்வேத தினம் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் நடத்திய நான் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறேன் என்ற பிரச்சாரத்திற்கு 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், கூறியதாவது: ஆயுர்வேதம் என்பது நோயைத் தடுக்கும் அறிவியல், இது ஒரு பண்டைய கால அறிவு பொக்கிஷம். ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும், அதன் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தற்போது உலகளவில் ஆயுர்வேத முறை அறியப்படுவதற்குக் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான, அயராத முயற்சிகள் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, ஆயுர்வேத சிகிச்சை இந்தியாவின் பண்டைய கால பாரம்பரிய சொத்து. மழைவாழ் மக்களுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை முறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.ஆயுர்வேதம், மற்ற சிகிச்சைகளை போல நோய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை பற்றி விவாதிப்பது இல்லை. நோய் வருவதை தடுப்பதைப் பற்றி பேசும் மருத்துவ விஞ்ஞானம் ஆயுர்வேதம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
    • இறால் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையத்தை மத்திய மீன் வளத்துணை இணை மந்திரி எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் சென்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் கட்டத்தின்படி பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது. 


    இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுகிறது.

    மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்ய வேண்டும். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    • பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
    • இந்த பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளதாவது:

    ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத் தொகை வழங்குகிறது

    இந்த ஊக்கத் தொகை பெறும் 23 பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த திட்டத்தின் பயன் பெறும் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும். ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×