search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India's economy"

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    ×