search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடை"

    • மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
    • மே தினம் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி யேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டா டப்பட்டது. சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது. இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம் அதனை ஏற்று 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெற பரவுவதாக இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு காவடி தூக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் அல்லது எப்போது நடந்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி, தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை என தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இவற்றை கைவிட்டு தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மதுக்கடை களையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வருகிற 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விடுமுறை நாளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.

    • மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபான க்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூ டங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூ டங்கள் ஆகியவை 4-ந் தேதி அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் தொடர்பு டையவர்கள் மீது உரிய சட்டப்பிரி வுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து ள்ளார்.

    • திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மதுக்கடைகள் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இந்தநிலையில் தற்போது அந்த பகுதியில் 3-வதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு வரதராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், புதிய மதுக்கடை திறக்க கூடாது என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி அருகில் உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.

    • குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக அரசு மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்க ஏற்கனவே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் மதுக்கடை திறக்கப்பட்டது.

    இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    'குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏற்கனவே வல்லம் பகுதியில் மதுக்கடை இருந்தது. பின்னர் அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    தற்போது மீண்டும் இங்கு மதுக்கடை திறந்து உள்ளனர். இதனை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.

    • மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.
    • பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் வர்த்தகா் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கோட்டூரில் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூரில் திருவாரூர் ரோடு, மன்னார்குடி ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதனால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுக்கடைகள் அடைக்கப்படும்.
    • உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகயைில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான நாளை (11-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், பார் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை செய்யக்கூடாது.

    தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி நாளை ஒரு நாள் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப்பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி. அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (50). ஈரோடு ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரபீக் வேலை பார்க்கும் பாரில் மது குடிக்க வந்த ஒருவரின் செல்போன் திருட்டு போனது.

    இது குறித்து ரபீக் மதுபாரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அடிக்கடி அந்த மதுபாருக்கு வந்து செல்லும் ஈரோடு ஈ.வி.என்.சாலை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போனை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து ரபீக் பிரகாசிடம் இருந்து அந்த மொபைல் போனை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் ரபீக் மீது பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ரபீக் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மரக்கட்டையால் ரபீக்கை தாக்கி அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது குறித்து ரபீக் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங்.
    • போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    போடிப்பட்டி :

    உடுமலை தளி ரோட்டில் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் லேசான தள்ளாட்டத்துடன் வந்த நபரை தடுத்து நிறுத்தினர்.மேலும் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்வதற்காக 'வாயை ஊது' என்று சொன்னபோது அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அவருடைய மனைவிக்கு போன் செய்து வரவழைத்தார்.அங்கு வந்த அவருடைய மனைவி போலீசாரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். மதுக்கடைகள் திறக்கிறது தப்பில்லேன்னா குடிக்கிறது எப்படி தப்பாகும். அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடித்தார். அரசாங்கம் விற்கும் மதுவைத் தானே வாங்கிக் குடித்தார். இதோ அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடையும் அங்கேயே பாரும் செயல்படுகிறது.

    குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங். அங்கே குடிச்சிட்டு ரோட்டிலே படுக்க முடியுமா? வீட்டுக்கு போய்தானே ஆகணும். அப்போ நீங்க எப்படி பிடிக்கலாம்'என்று போலீசாரிடம் எகிறினார். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

    அந்த நபருக்கு குடி பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக போலீசார் முயன்றனர். ஆனால் குடிச்சதை நாங்களே ஒத்துக்கும் போது எதுக்கு டெஸ்ட் பண்ணனும். எங்கேயும் வர முடியாது என்று அடம் பிடித்தார். இதனையடுத்து போதை ஆசாமியின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    அந்த அம்மா நியாயமா தானே கேக்கறாங்க என்று ஒரு தரப்பினரும், போலீசாரின் கையை கட்டிப் போட்டா இது மாதிரி தப்பு பண்ணினவங்களெல்லாம் எகிறத் தான் செய்வாங்க என்று இன்னொரு தரப்பினரும் விமர்சனத்தை முன் வைத்தனர்.

    • மதுக்கடை ஊழியரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பணியாற்றுபவர் சரவணகுமார் (வயது 42). சம்பவத்தன்று கூனஞ்சேரி மணி, திருவைகாவூர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மதுக்கடையில் வந்து பீர் பாட்டில் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் தந்த மதுக்கடை ஊழியர் சரவணகுமாரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    இது குறித்து சரவ ணகுமார் கொடுத்த புகாரி ன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன் சப்-இன்ஸ்பெ க்டர் முருகே சன், சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் அன்ப ழகன், தலை மை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மணி, சத்தியமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகி ன்றனர்.

    ×