search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிலாது நபி"

    • இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் பிறந்தநாள் அனைவராலும் மிலாதுநபி பண்டிகையாக கொண்டாப்படுகிறது.
    • சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார்.

    சென்னை:

    மிலாது நபி திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு "மிலாதுன் நபி" நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    "நம்பிக்கைக்குரியவர்", "அடைக்கலம் அளிப்பவர்", "வாய்மையாளர்" எனப் பொருள்படும், "அல் அமீன்" எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்ட நபிகள் பெருமானார், ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

    "ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்" என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரரான அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி. அவை பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை!

    அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தநாளாகிய "மிலாதுன் நபி" நன்னாளை இஸ்லாமிய மக்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன்முதலாக, கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டிலேயே அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினார். ஆனால், அந்த மிலாதுன் நபி நாள் விடுமுறையை 2001-ல் அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. தி.மு.க. அரசு மீண்டும் 2006-ல் அமைந்தவுடன், மிலாதுன் நபித் திருநாளுக்கு "அரசு விடுமுறை" வழங்கியது.

    என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக-உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திராவிட முன்னேற்றக்கழக அரசுதான், அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கிறது.

    மேலும், உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியது, வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் தொடங்கியது, உருது அகாடமியைத் தொடங்கியது, கண்ணியத்துகுரிய காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, இடம் ஒதுக்கியது, காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியது, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தது என தி.மு.க.வும் கலைஞரும் இஸ்லாமிய சமுதாயத்துக்காகச் செய்த திட்டங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டுக்கொண்டே இருக்கலாம்.

    இந்த ஆழங்காற்பட்ட பேரன்பின் தொடர்ச்சியாகத்தான் நமது திராவிட மாடல் அரசிலும், சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு; உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு; சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு; தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிப்பு; பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாதுன் நபி நன்னாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கின்றேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம் ''மிலாதுன் நபி'' திருநாளில், உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ''எளியோர்களிடம் கருணை காட்டுங்கள். சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள்'' என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு எடுத்துரைத்த போதனைகளாகும்.

    அன்பு இருந்தால் தான் பிறர்க்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

    இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் பிறந்தநாள் அனைவராலும் மிலாதுநபி பண்டிகையாக கொண்டாப்படுகிறது. இந்நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைய நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரது வாழ்வு செழிக்கவும், வளரவும், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும், மகிழ்ச்சி நிறையவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மிலாது நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

    இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் பிறந்தநாள், மிலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    1400 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் நபிகள் நாயகம் ஒட்டுமொத்த மனித குலத்தையும் நல்வழிப்படுத்த மகத்தான நன்னெறிகளைப் போதித்தார். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.

    சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மிலாதுநபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

    அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம்.

    இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    பா.ம.க. தலைவவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:

    மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய இஸ்லாமியர்களின் வழிகாட்டி முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார். இறை நம்பிக்கை, பாவ மன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற குரானின் பாடங்களை இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் போதித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்:

    நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாளில் மத நல்லிணக்கம் தழைத்தோங்கி, மனித குலம் ஒற்றுமையாக வாழவும் வளம் பெறவும் பிரார்த்திப்போம். இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட இந்த இனிய நாளில் அன்புடன் உளமாற வாழ்த்துகிறேன்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள். வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார்.

    உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்ற அண்ணல் நபிகளின் போதனைகளை ஏற்று அவரது வழியில் அயராது உழைத்திட உறுதியேற்போம்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இறைவன் முகமது நபிகள் வழியாக வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. நபிகள் அதனை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வெளிப்படுத்தினார். எல்லா தீர்க்கதரிசிகளிலும் மிகவும் சிறந்தவராக முகமது நபிகள் போற்றப்படுகிறார். உலகில் வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    வி.கே.சசிகலா:-

    நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறை தூதர் நபிகள் நாயகம் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர்.
    • உலகின் 3-வது பெரிய மதம்

    கோத்தகிரி

    உலகின் 3-வது பெரிய மதமான இசுலாமிய மதத்தினை உருவாக்கிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து இசுலாமிய மக்களும் ஒன்றிணைந்து காலை தொழுகையினை முடித்த பின்னர் நபிகள் நாயகத்தின் பெருமையையும், அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து பஸ் நிலையம், காம்பாய்கடை வரையில் ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர்.

    • அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து, போற்றிக் கொண்டாடி மகிழ்வோம்.
    • அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    'மிலாதுன் நபி' திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து, போற்றிக் கொண்டாடி மகிழ்வோம்.

    அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×