search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாபாரதம்"

    • பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
    • நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை

    குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.

    தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,

    "கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.

    வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.

    கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.

    தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.

    கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.

    வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.

    மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.

    பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.

    வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.

    காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.

    காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.

    உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    • வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.
    • வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    வெற்றி தரும் வன்னி மரம்

    வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.

    இவற்றுள் வன்னிமரம் மிகவும் விசேஷமான ஒரு மரம்.

    இந்த மரம் உள்ள இடத்தின் அருகில் இன்னொரு மரம் இயற்கையாய் தோன்றுவதும் இல்லை.

    பயிரிடுவதும் மிகவும் கடினம்.

    வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள்.

    ஜெயதுர்கா கோயில் கொண்டிருக்கும் இடம் அது.

    மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தமது ஆயுதங்களை, வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்கள் உண்டு.

    விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில், வன்னிமரம் அக்னி சொரூபம் ஆகும்.

    வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    விஜயதசமியின்போது, துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னிமரத்தடியில் நடக்கும்.

    வன்னி, வெற்றியைத் தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விசேஷம்.

    வன்னிமரம் புகழ்பெற்ற சில சிவாலயங்களில் தலவிருட்சமாக இருக்கிறது.

    இந்த மரத்தை வணங்கி வழிபட்டால், பரீட்சையில், வழக்குகளில் வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம் என்பது நிச்சயம்.

    • மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.

    • குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். மேம்பாடும் நற்புகழும் உண்டாகும்.
    • வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர்.

    மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான விநாயகபெருமானை வணங்கிவிட்டே எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

    குறிப்பாக எந்த ஓரு சுப விஷயத்தை செய்ய தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு விட்டு , "அப்பனே! விநாயகா ! தொடங்கும் செயல் தடையேதும் இன்றி இனிதே நிறைவேற்றி அருள்வாய்!" என வணங்கிவிட்டே செயல்படுவர். அதேபோன்று எழுத தொடங்கினாலும், "பிள்ளையார் சுழி போட்டுவிட்டே எழுத தொடங்க வேண்டும்" என்று குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் வழிகாட்டுவர்.

    விநாயகருக்கும் சிறந்த எழுத்தாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு . தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகரை வணங்குவோருக்கு விநாயக பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

    விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை போற்றி வழிபடுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

    இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும். தோஷங்கள் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.

    தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே!

    கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே!

    அற்புதம் நிகழ்த்துபவனே!

    மோதகம் ஏந்தியவனே!

    சந்திரனைத் தலையில் சூடியவனே!

    உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே!

    உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே!

    உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே!

    பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே!

    வல்லமை நிறைந்தவனே!

    ஆனைமுகனே!

    கருணை மிக்க இதயம் கொண்டவனே!

    அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே!

    எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

    ஓங்கார வடிவினனே!

    கருணாமூர்த்தியே!

    பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே!

    எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே!

    பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே!

    அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே!

    நித்ய வடிவினே!

    உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே ! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே!

    பக்தர்களின் துயர் களைபவனே!

    ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே!

    செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே!

    உன்னை சரணடைந்து போற்றுகின்றேன். ஒற்றைக் கொம்பனே!

    கணபதீஸ்வரா!

    சிவ பெருமானின் பிள்ளையே!

    ஆதிஅந்தமில்லாதவனே!

    துன்பம் துடைப்பவனே!

    யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே!

    உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.

    • அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.
    • கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    திருநெல்வேலியில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கோவில், ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில், ஸ்ரீமனோன்மணீச்வரர் கோவில ஆகிய மூன்று சிறப்பான கோவில்கள் அமைந்துள்ளன.

    ஸ்ரீ ஆதிநாராயணசாமி:

    மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டபோது, ஸ்ரீவியாசரின் அறிவுரைப்படி இங்கு வந்து தவமிருந்து, ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று இக்கோவிலைக் கட்டி, 1008 அந்தணர்களைக் குடியமர்த்தி இவ்வூரை உருவாக்கினான். அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.

    ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில்:

    பிரம்ம தேவர் தாம் பூஜை செய்வதற்காக ஸ்ரீநாராயணரிடம் நேரில் பெற்ற பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகு மிக்க திருமேனியுடன் அருட்சக்தி மிக்கவராகக் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீ மனோன்மணீச்வரர் கோவில்:

    திருக்கயிலையில் பார்வதி தேவி உலக நலனுக்காக சிவபெருமானைத் தியானித்து 1008 தேவ தாமரை மலர்களைத் தூவினாள். சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி அம்மலர்களை ஏற்றார். அவ்விடங்கள் 1008 சிவ க்ஷேத்திரங்கள் ஆகின. இதில் மனோன்மணி லிங்கம் தோன்றிய இடம் விஜயநாராயணம் ஆகும். எனவே இத்தலம் மனோன்மணீச்வரம் என அழைக்கப்படுகிறது. இது 1008 சிவ க்ஷேத்திரங்களில் 74-ஆவது க்ஷேத்திரமாகும்.

    இத்திருக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவே ஒரு பொய்கையும் இருந்தது. இதன் கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய அந்தச் சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    "பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள்வதுபோல திருவருள் புரிகிறேன்" என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம். பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.

    பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கினால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். இந்தப் பேறுகளை அடைய பௌர்ணமியன்று இக்கோவிலை வலம் வாருங்கள்.

    • பாஞ்சசன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படுவதை தெரிவித்தார்.
    • அருமையானதும், பெருமையானதும் ஆக விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் இருந்து பெறப்படும். இதில் மிக அருமையான வலம்புரி கிடைப்பது அரிதாகும்.

    ஸ்ரீமந் நாரயணர் திருக்கரத்தில் ஒருகையில் வலம் புரிச்சங்கும் மறுகையில் ஸ்ரீசக்கரமும் தரித்தபடி காட்சி அளிப்பார்.

    தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடையும் போது அமிர்தம் மகாலஷ்மி, வலம்புரிசங்கு, காமதேனு இப்படி பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதில் மகாவிஷ்ணு மகாலஷ்மியை தனது இருதயத்திலும், கையில் சங்கையும் வைத்துக் கொண்டார். காத்தல் கடவுளாக விளங்கும் மகாவிஸ்ணு மகாபாரதயுத்தம் நடைபெற ஆரம்பிக்கும் போது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். கீதா உபதேசம் செய்து நிலைகுலையாது அர்ச்சுனனை போராட்டம் பற்றி வழிகாட்டினார். பாஞ்சசன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படுவதை தெரிவித்தார்.

    பிறப்புக்கும் இறப்புக்கும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. தீய சக்திகள் இதனால் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் அரண்மனைகளில் அரசர் விழாக்களில் இச்சங்கு முக்கிய இடம் வகிக்கப்படுகிறது. விழா ஆரம்பிக்கும் முன் போருக்கு தயாராகும்போது சங்கினை வாயில் வைத்து ஊதி ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால், கோரோசனை, கஸ்தூரி பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால் புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஸ்டோத்ரசத நூற்றியெட்டு எனவும், அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தெட்டு எனவும் சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜித்த பின் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும் வலம்புரி தீர்த்தம் பாவங்களைப்போக்கி தீவினை களைந்து நன்மை அளிக்கிறது.

    அருமையானதும், பெருமையானதும் ஆக விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் இருந்து பெறப்படும். இதில் மிக அருமையான வலம்புரி கிடைப்பது அரிதாகும். தேவி பாகவத்தில் வலம்புரி சங்கு பற்றி கதையன்று உண்டு. அக்காலத்தில் கிருஷ்ண பகவானுக்கு மகனாக அவர் தேகத்தில் சுதர்மன் அவதரித்தார். சுதர்மன் ராதையால் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக சங்கசூடனாக அசுரகுலத்தில் பிறந்து பின்பு சாபம் தீர பல தவங்கள் இயற்றி யாகங்கள் செய்து யாராலும் அழியாத வரம் பெற்றதோடு, மந்திரகவசமும் கிடைக்கப் பெற்றான். மூன்று யுகங்களிலும், கிருதயுகத்தில் வேதவதி, திரேதாயுகத்தில் சீதை, துவாபர யுகத்தில் பாஞ்சாலியான திரௌபதியாகப் பிறந்து திரிகாயினி எனப் பெயர் பெற்று திகழ்ந்தாள் வேதவதி. இவள் லஸ்மியின் அம்சமாகையால் இலஸ்மியிடமே சேர்ந்தாள்.

    லஸ்மி சரஸ்வதி கங்கை மூவருக்குள்ளும் ஏற்பட்ட கலகலப்பு பகையாக மாறி அவர்களே சாபமிட்டனர். அதன் விளைவே லஸ்மி அம்சமான துளசி தருமத்வஜனின் புத்திரி துளசியாக அவதரித்தாள். சாபங்கள் காரணமாக மானிடப்பிறவியாகி சங்கசூடனை மணம் புரிந்து பதிவிரதா தர்மத்தை கடைப்பிடித்து உலகம் போற்ற வாழ்ந்து வரும் போது சங்கசூடன் மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி ஆட்சி புரிய நினைத்தான்.

    அசுரருக்கும் தேவருக்கும் எப்போதும் தீராதபகை. அது போரில் முடிவுறுவது வழக்கம். அசுரனாகப் பிறந்து மூவுலகங்களையும் ஆட்டி வைத்து தேவலோகத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர சங்கசூடன் போர் செய்தான். அசுரப் படைகளை ஏவி தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அதனால் தேவர்கள் அனைவரும் திருமாலிடம் முறையிட "பிரம்மனிடம் பல வரங்கள் பெற்று அவன் அழியாது உள்ளான். அவனை சிவபெருமானால் மட்டுமே அழிக்க முடியும், அதிலும் மந்திரக்கவசமும் அவன் மனைவியின் பதிவிரதத் தன்மையும் இழக்கப்படாது சங்கசூடனுடன் இருக்கும் வரை அவனுக்கு அழிவு கிடையாது. ஆகையால் அரிய சக்தியுள்ள சிவனிடம் தஞ்சம் அடையுங்கள்" என்று அவர் கூறியதும் தேவர்கள் சிவனிடம் முறையிட, தேவர்கள் புடைசூழ சென்று சங்கரரும் சங்கசூடனுக்கு தூது அனுப்பி தேவர்களுக்கு உரிய தேவலோகத்தின் மீது ஆசைப்படாதே என்றும் எதுவும் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டால் அழிவு நிச்சயம் என்று சமாதானமாகப் போகும் படி கூறினார். அவன் தலையில் கனமும் மனதில் வஞ்சமும் சிவனாரையே எதிர்த்து பேசினான். தேவர்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கவேண்டும். அசுரர் அழிந்து பட்டு போகவேண்டும் என நினைப்பது சரியா? என்றும் தேவ சபையை வென்று அரசாள்வேன் எனக்கூறி நெடுங்காலம் போரிட்டுக் கொண்டே இருந்தான்.

    ஆக அவனை வெல்லுவது எளிதல்ல என நினைத்து அவனது மந்திரக்கவசத்தை தந்திரமாக யாசித்து பெற்றுக் கொண்டும் சங்கசூடனின் மனைவி துளசியிடம் விஸ்ணு சென்று அவள் கணவனாக மாறி அவள் பதிவிரதத்தன்மையை இழக்கச் செய்யவும் கடும் போர்புரிந்த சங்கசூடனை சிவபிரான் தன்சூலாயுதத்தால் பொடிப்பொடியாக்கினார். உயிர் இழந்த சங்கசூடன் வைகுந்தம் சென்று மோட்சம் அடைந்தான். சங்கசூடனின் உடல் சாம்பலாகியது. எலும்புகள் பூவுலகில் சங்குகளாகி ஆழ்கடலில் பிறப்பெடுத்தன. அவை தேவார்ச்சனைக்கு பயன்பட்டன, சங்கு தீர்த்தம் பூசைக்கு உகந்ததாய், மகாவிஸ்னு லஷ்மி உறைகின்ற பொருளாய் செல்வம் செழிக்க ஐஸ்வர்யம் கிடைக்க பூஜிக்கும் அருள் பெற்றது. வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் தெய்வங்களுக்கு செய்யப்பட்டு பூஜித்ததும் சங்கு தீர்த்தம் எம்மை புனிதம் அடைய வைக்கிறது. இந்நீரை தீர்த்தமாக அருந்த நோய்கள் நீங்கி ஆனந்தம் பெறலாம். சங்கின் மகத்துவத்தை உணர்ந்து என்றும் பூஜித்து அதன்பலனை அடைவோம். 

    • மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
    • அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர்.

    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தூங்கும்போது பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி விஸ்வரூப தரிசனம் அளித்தாக ட்வீட் செய்துள்ளார்.

    அந்த வீடியோவில் தேஜ் பிரதாப் யாதவ் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை முதலில் காண முடிகிறது. பின்னர் அவர் கனவு காண்பது போல் கண்கணை சிமிட்டுவது தெரிகிறது. அதன்பின், மகாபாரதம் சீரியலில் வருவது போல் போர்க்களத்தில் குதிரைகள் வருவது தெரிகிறது. அத்துடன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் தெரிகிறது. உடனே தேஜ் பிரதாப் யாதவ் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் அமர்கிறார்.

    கனவில் விஸ்வருப தரிசனம் கொடுத்ததாக கூறி, மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கேலி கிண்டல் செய்தவண்ணம் உள்ளனர்.

    அவரது பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் நினைவுபடுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர். கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் போன்று வசனம் பேசி அவர் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

    அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், அதன்பிறகு தேஜ் பிரதாப் யாதவுக்கும் எப்படி இவ்வளவு பெரிய விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்? என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். 

    ×