search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடகம்"

    • நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கேரள ஐகோர்ட்டு உதவிப் பதிவாளர் சுதீஷ், கோர்ட் கீப்பர் பி.எம். சுதீஷ் ஆகியோர் ஒரே தேசம் ஒரு பார்வை ஒரே இந்தியா என்ற பெயரில் நாடகம் நடத்தி உள்ளனர். இந்த நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய வக்கீல்கள் சங்கம் மற்றும் சட்டப்பிரிவு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி ஆகியோருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் கட்டமாக உதவி பதிவாளர் டி.ஏ.சுதீஷ் மற்றும் பி.எம்.சுதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது
    • சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் ,கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர், ஆலயத்தில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-ம் நாள் திரு விழா நடைபெற்றது. இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை ,திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மறையுரை நடைபெறுகிறது. அதன் பிறகு இன்று இரவு 9 மணிக்கு குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவ சகாயமே என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மேடைகளில் பிரபல கலைஞர்கள் இந்த நாட கத்தில் நடிக்க உள்ளனர். நாளை 8-ம் நாள் விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக சமபந்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை 9ம் நாள் திருவிழாவும், இரவு கிறிஸ்து அரசர் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை 26-ந் தேதி 10ம்நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஆயர் நசரேன் சூசை பங்கு பெற்று தலைமை மறையுரை ஆற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் ,பங்கு பேரவை பொறுப் பாளர்கள் ,உறுப்பினர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    • ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம் நடந்தது.
    • வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத்துறை ஏற்பாடு செய்த நாடகக் காட்சியை காணச் சென்றனர். ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தல்லோ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறந்த கலைநயத்துடனும், பாவனைகளுட னும் தங்களது கதாபாத்திரத்திற்கான உடை மற்றும் அணி கலன் உதவியுடன் நாடகத்தினை மிகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் விளக்கினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி சார்பாக 61 ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முனைவர் பவுமினா, துறைத்தலைவர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் அர்ச்சனா தேவி, வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
    • முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

    மதுரை

    மதுரையில் ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர் களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    நிலவில் சந்திரயான் 1-ஐ மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2-ஐ வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3-ஐ நிலவில் அனுப்பிவெற்றி பெற்றுள்ளது. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்துள்ளார்.

    நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும். அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி யார் இதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப் பட்டது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப்பொய் பேசுகிறார் கள்.

    இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க. பச்சை பொய் பேசுவதை வாழ்க்கை யாகவும், அரசியல் கடமை யாகவும் கூறிவருகிறது.

    தி.மு.க. அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

    நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது, நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடகமாகும். இதில் உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலையை மறைக்க பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்தது அம்பலம்

    பண்ருட்டி, ஆக.14-

    பண்ருட்டி அருகே தந்தையை மகனே கட்டையால் அடித்து கொன்றுவிட்டு பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (வயது 69). இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன்,மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். பிரபாகரன், மகாலிங்கம், அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையிலான போலீசார் கொலையாலிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவி கணவர் அ.தி.மு.கவில் உள்ளார். ராமு இறந்து கிடந்த போது அவரது உடலின் மீது அ.தி.மு.க கட்சியின் துண்டு கிடந்ததின் அடிப்படையிலும், கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவியின் வீட்டிற்கு சென்றதால் முதற்கட்ட விசாரணையாக பஞ்சாயத்து தலைவியின் கணவரை விசாரிக்க முடிவு செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர் யார் யாருடன் பேசி வந்தார் என அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர்.பின்னர் கொலையான ராமுவிற்கும் இவருக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் பஞ்சாயத்து தலைவி கணவரிடம் கேட்ட நிலையில் கொலைக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.

    அடுத்தகட்டமாக போலீசார் ராமுவின் மகன்கள், மருமகள்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ராமு மகன்கள், மருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் புருஷோத்தமன் தனது தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் போலீசாரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:- 

    எனக்கும் எனது தந்தை ராமுவிற்கும் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினை காரணமாக ஆத்திரத்தில் இருந்த நான் சம்பவத்தன்று வீட்டின் முன் படுத்து தூங்கி கொண்டிருந்த எனது தந்தையை வாயை துணியால் அமுக்கி கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் போட்டுவிட்டேன். இந்த கொலையில் என் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் எனது தந்தை உடலின் மீது அ.தி.மு.க கட்சி துண்டை போட்டுவிட்டு பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு போய்விட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். நான் நினைத்தபடி போலீஸ் மோப்ப நாய் எனது தந்தை இறந்து கிடந்த இடத்தில் இருந்து பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு சென்றது. மேலும் நான் செய்த இந்த நாடகத்தால் அவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கொலையிலிருந்து நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டனர் இவ்வாறு அவர் கூறினார். தந்தையை மகனே கொலை செய்து விட்டு பழியை பஞ்சாயத்து தலைவி கணவர் மீது போடுவதற்கு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.

    • சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • நிகழ்ச்சியில் காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

    ஊட்டி,

    சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வளாகத்தில் தாளாளர் தன்ராஜ் அறிவுறுத்தலின்படி, நிர்வாக இயக்குநர் சம்ஜித் தன்ராஜ் முன்னிலையில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இதில் பிளாஸ்டிக் பொருட்களை பொது இடம், விவசாய நிலம் மற்றும் நீர்நிலைகளில் வீசி எறிவதால் ஏற்படும் விளைவுகள், சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் மாணவர்கள் தயாரித்த காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர். முன்னதாக ஆசிரியை ஆஷா வரவேற்றார். மாணவி ஸ்ரீஆதிரா நன்றி கூறினார். 

    • ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இறுதி நாளான நேற்று வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடக கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடக விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெற்று வந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று (25-ந்தேதி) வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடை பெற்றது.

    இதனை ஏராளமா னோர் கண்டு ரசித்தனர்.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
    • வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெற்று வருகிறது.

    விழாவில் நேற்று ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம், நடைபெற்றது.

    இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    இன்று இரவு வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

    • ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்று 4-வதுநாள் நிகழ்ச்சியாக அரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகம் நடைபெற்றது.

    இன்று மாலை சென்னை சுதாவிஜயகுமார் குழுவி னரின் பரதநாட்டிய நிகழ்ச்சி யும், நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகமும்,

    25-ந்தேதி வள்ளி திருமணம் எனும் நாட்டிய நாடகமும் நடை பெறவுள்ளது.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

    • ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.
    • தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

    புதுச்சேரி:

    2 ஆயிரம் நோட்டு தடையால் எந்த பலனும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீதார்பார ண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட் ட சுவாமிகளை அவர் தரிசனம் செய்தார். இறுதியாக சனீஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.  தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக கூறுகின்றனர். இது கண்துடைப்பு நாடகம். இதனால் எந்த பலனும் இல்லை. கர்நாட காவில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு விஜயகாந்த் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதாக கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் உள்ளதாக முன்பு கருத்து கூறிய கனிமொழி எம்.பி. தற்போது அது குறித்து பேச மறுக்கிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க .வினர் கள்ளச்சா ராயம் விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இது தான் திராவிடமாடலா. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுவை மாநில செயலாளர் வேலு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜபதி உடன் இருந்தனர்.

    • நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.
    • குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழாஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்சனையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடை பெறும்.

    இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.

    பாகவத மேளா நாடக விழா முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாட்டிய நாடகம் நடை பெற்றது.

    துவக்கவிழா நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த தீனாபாபு, பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சி.கே.கரியாலி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார்.

    ×