search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெலட்டூர் பாகவதமேளாவில் ஹரிஹரலீலா விலாசம் நாடகம்; கண்டுகளித்த பொதுமக்கள்
    X

    ஹரிஹரலீலா விலாசம் நாடகம் நடந்தது.

    மெலட்டூர் பாகவதமேளாவில் ஹரிஹரலீலா விலாசம் நாடகம்; கண்டுகளித்த பொதுமக்கள்

    • பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
    • வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெற்று வருகிறது.

    விழாவில் நேற்று ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம், நடைபெற்றது.

    இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    இன்று இரவு வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×