என் மலர்tooltip icon

    இந்தியா

    மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பூனம் பாண்டே - பாஜக கொந்தளிப்பு
    X

    மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பூனம் பாண்டே - பாஜக கொந்தளிப்பு

    • பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.

    தசாரா விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் ராம் லீலா நாடகங்கள் பரவலாக வருடந்தோறும் நடத்தப்படுகின்றன.

    அந்த வகையில் டெல்லியில் பிரபலமான 'லவ் குஷ் ராம்லீலா' நாடகக்குழு, மாடல் அழகி பூனம் பாண்டேவை 'மண்டோதரி' (ராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர், 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் அமைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதி, பூனம் பாண்டேவை மாற்றக் கோரியுள்ளார்.

    பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் தலைவர் அர்ஜுன் குமார், "ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.

    அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பூனம் பாண்டே அவர்களில் ஒருவர் மட்டுமே" என்று தெரிவித்தார்.

    நாளை (செப்டம்பர் 22) நாடகம் தொடங்க உள்ள நிலையில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது.

    Next Story
    ×