என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tej Pratap yadav"

    • அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
    • லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

    இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.

    இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.

    இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

    தந்தையுடன் ரோகிணி

     

    இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
    • சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆர்ஜேடியின் லாலு பிரசாத் உடைய மூத்த மகனும் தேஜஸ்வியின் சகோதரனுமான தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளார்.

    ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில், இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.

    இதையடுத்து அவரை ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு பிரசாத் நீக்கினார். இதை தொடர்ந்து ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

    அந்த தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்ஜேடியின் முகேஷ் ரோஷன் 42,644 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.  

    • தேஜ் பிரதாப் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • பீகார் தேர்தலில் தேஜ் பிரதாப் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லல்லு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவர் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் தேர்தலில் அவர் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தேஜ்பிரதாப் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

    பீகார் தேர்தல் பிரசாரம் இன்று முடிவடையும் நிலையில் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ்பிரதாப் யாதவின் சகோதரரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார்.

    • காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
    • நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.

    பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.

    நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.

    அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
    • அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர்.

    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தூங்கும்போது பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி விஸ்வரூப தரிசனம் அளித்தாக ட்வீட் செய்துள்ளார்.

    அந்த வீடியோவில் தேஜ் பிரதாப் யாதவ் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை முதலில் காண முடிகிறது. பின்னர் அவர் கனவு காண்பது போல் கண்கணை சிமிட்டுவது தெரிகிறது. அதன்பின், மகாபாரதம் சீரியலில் வருவது போல் போர்க்களத்தில் குதிரைகள் வருவது தெரிகிறது. அத்துடன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் தெரிகிறது. உடனே தேஜ் பிரதாப் யாதவ் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் அமர்கிறார்.

    கனவில் விஸ்வருப தரிசனம் கொடுத்ததாக கூறி, மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கேலி கிண்டல் செய்தவண்ணம் உள்ளனர்.

    அவரது பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் நினைவுபடுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர். கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் போன்று வசனம் பேசி அவர் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

    அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், அதன்பிறகு தேஜ் பிரதாப் யாதவுக்கும் எப்படி இவ்வளவு பெரிய விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்? என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். 

    விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென மாயமாகியுள்ளார். #TejPratapYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப்.

    இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணம் தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளது.

    திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் பாட்னா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்ட சிறையில் உள்ள லாலுபிரசாத் யாதவ் தன்னை பார்க்க உடனடியாக வருமாறு தேஜ்பிரதாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையை பார்க்க சென்றார்.

    தந்தையை பார்த்து விட்டு ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பும்போது தேஜ்பிரதாப் யாதவ் திடீரென மாயமானார். போதிகயாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் மாயமானார். தேஜ்பிரதாப் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. #TejPratapYadav
    லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணம் ஆன 6 மாதத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். #TejPratapYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரிகள் லாலு பிரசாத்-ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும், முன்னாள் முதல்-மந்திரி தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவுக்கும் இந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பாட்னா நகரில் திருமணம் நடந்தது.



    இந்த நிலையில் தேஜ் பிரதாப் நேற்று பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இருவருக்கும் இணக்கமாக செல்வதில் பிரச்சினை உள்ளது. எனவே விவாகரத்து அளிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று கூறப்பட்டு உள்ளது.

    கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்பு ராஞ்சி நகரில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தந்தை லாலு பிரசாத்தை, தேஜ் பிரதாப் சந்தித்து பேசினார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #TejPratapYadav
    சினிமாவில் இருந்து அரசியலில் குதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் கட்சியுடன் கூட்டணி அமைத்து லாலு பிரசாத் யாதவ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும், தேஜ்பிரதாப் யாதவ் சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவியேற்றனர்.

    பின்னர், ஆட்சியை கவிழ்த்து விட்டு நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். பின்னர், தேஜஸ்வி யாதவ் முழு அரசியலில் இறங்கினார். தந்தை சிறை வாசத்தில் இருக்கும் நிலையில், தேஜஸ்வி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் வென்று காட்டினார்.

    ஆனால்,  தேஜ்பிரதாப் யாதவ் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் திருமணம் முடித்த அவர் தனது பார்வையை கலைத்துறை பக்கம் தற்போது திருப்பியுள்ளார். ஏற்கனவே, ஒரு போஜ்பூரி படத்தில் அவர் நடித்து இருந்தாலும், தற்போது பாலிவுட்டில் கால்தடம் பதித்துள்ளார்.

    ‘ருத்ரா - தி அவதார்’ என்ற படப்பெயருடன் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ளார். 
    ×