search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வடக்கு விஜயநாராயணம் பகுதியின் மூன்று சிறந்த கோவில்கள்
    X

    வடக்கு விஜயநாராயணம் பகுதியின் மூன்று சிறந்த கோவில்கள்

    • அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.
    • கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    திருநெல்வேலியில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கோவில், ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில், ஸ்ரீமனோன்மணீச்வரர் கோவில ஆகிய மூன்று சிறப்பான கோவில்கள் அமைந்துள்ளன.

    ஸ்ரீ ஆதிநாராயணசாமி:

    மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டபோது, ஸ்ரீவியாசரின் அறிவுரைப்படி இங்கு வந்து தவமிருந்து, ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று இக்கோவிலைக் கட்டி, 1008 அந்தணர்களைக் குடியமர்த்தி இவ்வூரை உருவாக்கினான். அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.

    ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில்:

    பிரம்ம தேவர் தாம் பூஜை செய்வதற்காக ஸ்ரீநாராயணரிடம் நேரில் பெற்ற பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகு மிக்க திருமேனியுடன் அருட்சக்தி மிக்கவராகக் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீ மனோன்மணீச்வரர் கோவில்:

    திருக்கயிலையில் பார்வதி தேவி உலக நலனுக்காக சிவபெருமானைத் தியானித்து 1008 தேவ தாமரை மலர்களைத் தூவினாள். சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி அம்மலர்களை ஏற்றார். அவ்விடங்கள் 1008 சிவ க்ஷேத்திரங்கள் ஆகின. இதில் மனோன்மணி லிங்கம் தோன்றிய இடம் விஜயநாராயணம் ஆகும். எனவே இத்தலம் மனோன்மணீச்வரம் என அழைக்கப்படுகிறது. இது 1008 சிவ க்ஷேத்திரங்களில் 74-ஆவது க்ஷேத்திரமாகும்.

    இத்திருக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவே ஒரு பொய்கையும் இருந்தது. இதன் கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய அந்தச் சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    "பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள்வதுபோல திருவருள் புரிகிறேன்" என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம். பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.

    பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கினால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். இந்தப் பேறுகளை அடைய பௌர்ணமியன்று இக்கோவிலை வலம் வாருங்கள்.

    Next Story
    ×