search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.

    முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்தியா 2 பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
    • பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூர் வீராங்கனையை 21-19, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போடிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூர் வீரரை 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதையடுத்து, பேட்மிண்டன் பிரிவில் இரு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
    • இந்திய அணியின் சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி பெருமை.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், இந்திய அணியின் சாதனைக்காக பெருமைப்படுவதாக கூறினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தியாவில் பேட்மிண்டன் மிகவும் போற்றப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பேட்மிண்டன் விளையாட்டை இன்னும் பிரபலமாக்குவதற்கும், வரும் காலங்களில் அதிகமான மக்கள் விளையாட்டை தொடருவதை உறுதி செய்வதற்கும் உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி நடைபெற்றது.
    • இதில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதல் சுற்றில் ஆடிய சும்த் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 21-11 என்ற கணக்கில் வென்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-5, 21-6 என்ற கணக்கில் வென்றார்.

    இதையடுத்து, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இறுதிப்போட்டியில் சீனாவின் வாங் ஜி யி- பி.வி.சிந்து மோதினர்
    • பதிலடி கொடுத்த சீன வீராங்கனை 2ம் செட்டை வசமாக்கினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டியின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் சிறப்பான சில ஷாட்களை அடித்து ஆட்டத்தை தன் வசமாக்கினார். அடுத்தடுத்து 11 புள்ளிகள் பெற்ற அவர் 11-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னரும் தனது நிலையை தக்க வைத்த சிந்து, முதல் செட்டை எளிதில் வென்றார். இரண்டாம் செட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை அந்த செட்டை வசமாக்கினார்.

    அதன்பின் சுதாரித்து ஆடிய சிந்து, கடுமையான போராட்டத்திற்கு பிறகு 3ம் செட்டை வென்றார். இப்போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு மூன்றாவது கோப்பையை வென்றிருக்கிறார். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றிருந்தார்.

    • எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார்.
    • தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் செய்ய சிந்து அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி நடுவர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார். நடுவரின் முடிவை எதிர்த்து தலைமை நடுவரிடம் அப்பீல் செய்தும் பலன் இல்லை. அதன் பிறகு விரக்தியில் ஆடிய சிந்து அந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார்.

    தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆசிய போட்டியில் நடுவரின் தவறான முடிவுக்கு ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிக் ஷின் சென், சிந்துவிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் சிந்துவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் நடுவர் செய்த தவறை திருத்த முடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற மனித தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
    • இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.

    உகாண்டாவில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணியினர் 47 பதக்கங்களை வென்றனர்.
    கம்பாலா:

    உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று அசத்தினர்.

    பாலக் கோலி, அபு  ஹுபைதா மற்றும் அம்மு மோகன் ஆகியோர் தலா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மானசி ஜோஷி மகளிர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் தங்கம் வென்றார். 

    தங்கம் வென்றவர்கள்: மனோஜ் சர்க்கார், சுகந்த் கதம், ஹர்திக் மக்கர், அபு ஹுபைதா, தினகரன், பாலக் கோலி, மானசி ஜோஷி, ஜோதி, அம்மு மோகன், அர்வாஸ் அன்சாரி, தீப் ரஞ்சன், சிராக் பரேத்தா, ராஜ் குமார், மந்தீப் கவுர், ருத்திக், சிவராஜன்.

    டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், ஆடவர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான இரட்டையர் எஸ்எல்3-எஸ்எல்4 போட்டியில் மனோஜ் சர்க்காருடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 போட்டியில் பாலக் கோலியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாலி:

    பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னணி வீரர், வீராங்கனைகள் முதல் தடையை கடந்துள்ளனர்.

    முன்னாள் நம்பர்-1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் (ஒற்றையர் முதல் சுற்று) பிரான்ஸ் வீரர்  கிறிஸ்டோ பாபோவை 21-18 15-21 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஸ்ரீகாந்த் அநேகமாக இந்தோனேசிய வீரர் ஜோனாதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலாட்டி தேவா ஜோடியை 21-11 22-20 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    பி.வி.சிந்து

    மற்றொரு முன்னணி இந்திய வீரரான பருபள்ளி காஷ்யப், தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

    பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோர் ஏற்கனவே 2ம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
    ஹைலோ ஓபன் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் தாய்லாந்து முன்னணி வீரர் குன்லாவத்தை வீழ்த்தினார்.
    சார்புரூக்கன்:

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து முன்னணி வீரர் குன்லாவத்தை 21-18 12-21 21-19 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

    உலக தரவரிசையில் 21ம் இடத்தில் இருக்கும் லக்சயா, இனி அரையிறுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீன் யீவை எதிர்கொள்கிறார். 

    இந்த போட்டித் தொடர், இதற்கு முன்பு சார்லோர்லக்ஸ் ஓபன் என அழைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இந்திய வீரர் லக்சயா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறினார்கள். #SainaNehwal #Srikanth
    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், 7-ம் நிலையில் இருப்பவரும் ஆன சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையும், 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.



    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங்கின் வாங் விங் கி வின்செட்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 23-21, 8-21, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    ×