search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்விக்"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
    • முதல் செட்டை லக்ஷ்யா சென் கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சாருடன் மோதினர். முதல் செட்டை சென் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டை அபாரமாக விளையாடிய குன்லவுட் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 22-20, 21-13, 21-11 என்ற கணக்கில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வியடைந்தார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.
    • இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்எஸ் பிரணாய் 19-21, 21-18, 21-8 என்ற புள்ளி கணக்கில் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வியடைந்தார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்தது. ஆக்செல்சென் அரையிறுதியில் ஜப்பானின் கொடை நரோகாவை எதிர்கொள்கிறார்.

    மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.

    இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சாத்விக் - சிராக் ஜோடி இந்தோனேசிய ஓபன், கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    ×