search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கடை"

    • குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் சிவா (வயது 37). கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போனிபாஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவதினம் சிவா செந்தறை பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது அங்கு வந்த போனிபாஸ் தகாத வார்த்தைகள் பேசி கம்பால் அடித்து சிவாவை காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சிவா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ரெத்தினம் (வயது 30). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் பொறியியல் பட்ட படிப்பை முடித்த அனிஷ் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.

    இதற்காக அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் சிகிச்சை யளித்தும் நோய் குணமாகாத நிலையில் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறையின் உள்ளே கால் வழுக்கியதில் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதில் அனிஷ் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    உறவினர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் அனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் - ஏட்டு படுகாயம்
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதி கூட்ட விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பிரடெரிக் பொன்குமார் (வயது 52).

    இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். நீரோடி காலனி சோதனை சாவடி யில் பணியில் இருந்த பிர டெரிக் பொன்குமார், பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    மண்டைக்காடு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நெல்சனும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் - பைங்குளம் சாலையில் செல்லும்போது, எதிர் புறத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரெடரிக் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப் பட்ட பிரடெரிக் பொன் குமார், நெல்சன் ஆகி யோர் பலத்த காயம் அடைந்தனர். பிரடெரிக் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நெல்சன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கடை கைசூண்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் அனோஜ் என்பவரும் காயம் அடைந்தார். அவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.

    இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.

    சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குலசேகரத்தில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்
    • தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பதாக புதுக்கடை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து புதுக்கடை சப்-இன்ஸ்பெக் டர் சேகர் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத் துக்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் 5 வாலிபர்கள் நின்றனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, போலீசை கண்டதும் 3 வாலிபர்கள் தப்பியோடினார்கள். பிடி பட்ட 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுக்கடை அருகே மூன்று மாவு பகுதியைச் சேர்ந்த அகின் (வயது 23), பைங்குளம் பகுதி பிலாக்க விளையைச் சேர்ந்த அஜின் (28) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் தப்பியோடியவர்கள் ராஜா (22), பிரதீப் (22), ஜாண் (21) என தெரிய வந்தது.

    மேலும் பிடிபட்டவர்களி டம் இருந்து 120 கிராம் கஞ்சா, மேலும் நான்கு போதை மாத்திரைகள், கஞ்சா புகைக்க பயன்ப டுத்தும் குழல், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    குலசேகரம் சந்தை பகுதியில் நேற்று மாலை தனிப்படை போலீசார் குலசேகரம் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் கையில் பையை வைத்துக்கொண்டு பஸ் ஏறுவதற்க்கு காத்து இருந் தார்.

    போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது உடனே அந்த வாலிபரை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது குலசேகரம் வெண்டலிகோடு, மெய்தி ருத்திவிளை, பகுதியை சேர்ந்த மோனிஷ் (26) என்பதும் பட்டதாரி வாலிபர் என்றும் தெரியவந்தது.

    கேரளா எல்லையான ஆறுகாணி பகுதியில் உள்ள ஒரு வாலிபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து குலசேகரம் மார்த்தாண்டம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரனையில் தெரிய வந்தது. இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    குளச்சல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னை நகரை சேர்ந்த காட்சன் (18) என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் வாணியக்குடியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய தினேஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததும் விசார ணையில் தெரிந்தது.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்ட லத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த னர்.

    • தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி ஜெயா ( வயது 48). இவர்கள் மகள் சிவரஞ்சினி (20).

    ஜெயா முந்திரி ஆலையில் பணி செய்கிறார். சிவரஞ்சனி தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மகள் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்க்க துவங்கியுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவதினம் இது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி தாய் தந்தையர் வேலைக்கு போன பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளர்.

    இது தொடர்பாக தாய் ஜெயா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகர் சிவரஞ்சனி தற்கொலை செய்தது காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என விசாரித்து வருகிறார்.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது.

      இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பு அணை கட்டினால் கடல் நீர் புகுவது தடுக்கப்படுவதோடு, குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் மாறுவதும் தடுக்கப்படும் எனக்கூறப்பட்டது.

      இதையடுத்து தமிழக அரசு புதுக்கடையை அடுத்த பரக்காணி பகுதியில் ரூ.15.37 கோடியில் தடுப்பு அணை கட்ட முடிவு செய்தது.

      பரக்காணியில் தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

      அதில் முறையான ஆய்வு மற்றும் அனுமதியின்றி தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

      இந்த மனுவை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பரக்காணி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்ட தடை விதித்துள்ளது.

      கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை இப்பணிகளை நிறுத்த வேண்டும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனுதாரர் தரப்பு மனு அளித்திருந்தால் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணையால் ஏற்படும் பாதிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களிடம் அறிக்கை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.  

      • தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
      • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் வேதமணி (வயது76). இவரது மனைவி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

      இதனால் தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி விஷப் பொடி தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவி னர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேதமணி உயிரிழந்தார்.

      இது தொடர்பாக அவரது மகன் ஜெபசிங் (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • போலீசில் பெண் புகார்
      • போலீசார் தீவிர விசாரணை

      கன்னியாகுமரி:

      புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் , ஆவுநின்ற விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெகன். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

      இவரது மனைவி ஆஷா(வயது 29). இவர் ஆவுநின்றவிளையில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஆஷா வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

      இந்த நிலையில் அவரது வீடு திறந்து கிடப்பதாக கணவரின் தம்பி ஜெயசிங் போன் மூலம் ஆஷாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊருக்கு புறப்பட்டார்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்ததோடு, பீரோவையும் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

      இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்போது பீரோவில் இருந்த 2 1\2 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதாக ஆஷா தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

      திருட்டு போன நகைகள் மதிப்பு ரூ.75 ஆயிரம் என கூறப்படுகிறது. பூட்டிய வீட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • புதுக்கடை போலீசில் புகார்
      • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

      கன்னியாகுமரி:

      புதுக்கடை அருகே இனயம் பகுதி தோப்புவிளை யைச் சேர்ந்தவர் வினித் குமார் (வயது 37), தொழிலாளி.

      இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள னர். சம்பவத்தன்று சாந்தி தனது மகள்களுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.

      அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் மகள்களை வினித் குமார் பல இடங் களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை. மேலும் சாந்தியின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

      இது தொடர்பாக வினீத் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சேசு ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டர் சுகு மாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள்களுடன் மாயமான சாந்தி எங்கே சென்றார்?, அவர்களை யாராவது கடத்தி இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பலரிடம் பணம் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை
      • அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல்

      கன்னியாகுமரி:

      புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 50). இவரது மனைவி ஷீபா (48).

      இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மீனவர் யேசுதாஸ் (69) என்பவர் உட்பட பலரிடம் பணம் வாங்கி உள்ளனர். அதனை திருப்பி கொடுக்காத காரணத்தால் பணம் கொடுத்தவர்கள் பிரான்சிஸ் வீட்டில் சென்று கேட்டு உள்ளனர்.

      சம்பவத்தன்று பணம் கேட்க சென்றவர்களை பிரான்சிஸ் அவரது மனைவி ஷீபா ஆகியோர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

      இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் பணம் திருப்பி கொடுக்கவில்லை.

      இதையடுத்து குழித்துறை கோர்ட்டில் யேசுதாசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குழித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் பிரான்சிஸ், அவரது மனைவி ஷீபா ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

      • குமரி மாவட்டத்தில் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை
      • போலீசார் ரகசியமாக கண் காணிப்பு

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர் களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

      இந்த நிலையில் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியில் உள்ள பள்ளிகளை குறி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் புதுக்கடை சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண் காணித்தனர்.

      அப் போது முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்துடன் நின்ற ஒருவர் போலீசை கண்டதும் ஓட முயற்சி செய்துள்ளார். போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 கிராம் வீதம் இரண்டு பொட்டலங்களில் 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

      விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த இம்மானுவேல் ராஜ் மகன் லிவிங்க்ஸ்டன் புரோ (வயது 22) என தெரிய வந்தது.

      இது போன்று நேற்று மீண்டும் அதே பகுதியில் நடத்திய சோதனையின் போது முஞ்சிறை அரசு பள்ளியின் முன்புறம் உள்ள பஸ் நிலையத்தின் பின் பகுதியில் இரு சக்கரவாகனத்தில் ஒருவர் கஞ்சா விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

      அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர், முஞ்சிறை பகுதி முருகன் மகன் முபின் (25) என தெரிய வந்தது. சமமந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

      ×