search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    புதுக்கடை அருகே போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது

    • குலசேகரத்தில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்
    • தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பதாக புதுக்கடை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து புதுக்கடை சப்-இன்ஸ்பெக் டர் சேகர் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத் துக்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் 5 வாலிபர்கள் நின்றனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, போலீசை கண்டதும் 3 வாலிபர்கள் தப்பியோடினார்கள். பிடி பட்ட 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுக்கடை அருகே மூன்று மாவு பகுதியைச் சேர்ந்த அகின் (வயது 23), பைங்குளம் பகுதி பிலாக்க விளையைச் சேர்ந்த அஜின் (28) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் தப்பியோடியவர்கள் ராஜா (22), பிரதீப் (22), ஜாண் (21) என தெரிய வந்தது.

    மேலும் பிடிபட்டவர்களி டம் இருந்து 120 கிராம் கஞ்சா, மேலும் நான்கு போதை மாத்திரைகள், கஞ்சா புகைக்க பயன்ப டுத்தும் குழல், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    குலசேகரம் சந்தை பகுதியில் நேற்று மாலை தனிப்படை போலீசார் குலசேகரம் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் கையில் பையை வைத்துக்கொண்டு பஸ் ஏறுவதற்க்கு காத்து இருந் தார்.

    போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது உடனே அந்த வாலிபரை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது குலசேகரம் வெண்டலிகோடு, மெய்தி ருத்திவிளை, பகுதியை சேர்ந்த மோனிஷ் (26) என்பதும் பட்டதாரி வாலிபர் என்றும் தெரியவந்தது.

    கேரளா எல்லையான ஆறுகாணி பகுதியில் உள்ள ஒரு வாலிபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து குலசேகரம் மார்த்தாண்டம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரனையில் தெரிய வந்தது. இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    குளச்சல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னை நகரை சேர்ந்த காட்சன் (18) என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் வாணியக்குடியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய தினேஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததும் விசார ணையில் தெரிந்தது.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்ட லத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த னர்.

    Next Story
    ×