search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா"

    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
    • குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    கோவில் மனை நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி அல்லது குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், கருணாநிதி அளித்த குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் பேராவூரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சி.பி.ஐ. மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

    இதில் ஜெயராஜ், சி.பி.ஐ. நகர செயலாளர் மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, நகர விவசாய சங்க பொறுப்பாளர் சித்திரவேலு மற்றும் கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்.
    • மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவி ட்டுள்ளார்.

    பட்டா இல்லாதவர்களுக்கு பேராவூரணி அருகே கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பகுதிநேர அங்காடியில் முதல் விற்பனையை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைமாணிக்கம், அருள்நம்பி, தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சேகர், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
    • முகாமிற்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் 721 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்டமனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியா,மாவட்ட மீனவரணி செயலர் ரமேஷ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
    • இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ஊராட்சியில் அடங்கிய போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அனு மீது விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஸ்வர்யா ராமநாதன் உறுதி அளித்தார்.

    • கணவரால் கைவிடப்பட்ட நிலையில் சத்யபாமா இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
    • கிராம சபை கூட்டத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி சத்யபாமா, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் தனது கணவரால் கைவிடப்பட்ட நிலையில் இரு குழந்தை களுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சத்யபாமா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் 5-ம் வகுப்பும், மகள் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நயினார்பத்து கிராம ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் கடந்த

    22-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சத்யபாமா, தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    அதில் குழந்தைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை என்று கோரிக்கை வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் வைப்புத்தொகை செலுத்தி சத்யபாமாவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    மேலும், அவர் குடி யிருக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இலவச வீடு கட்டுவதற்கான நடவடிக்கை யினையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து சத்யபாமா வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சத்யபாமா கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன். ஒரு சில நாளில் எனது வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா ஆகியவை வழங்கப்பட்டது.

    மனு அளித்த ஒரு சிலநாளில் நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மின்சார வெளிச்சத்தில் எனது பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறினார்.

    • கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
    • அத்துமீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ஒரத்தநாடு தாலுகா கருக்காடிப்பட்டி ஊராட்சி அம்மையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு கடந்த 2000-ம் வருடம் தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.

    இந்த மனைகளில் ஓட்டு மற்றும் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம்.மேலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணங்கள் கட்டி அதற்கான ரசீதும் சட்டப்படி பெற்று உள்ளோம்.

    இந்த நிலையில் ஒரு நபர், அரசு வழங்கிய அந்த இடத்திலும் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அவரிடம் கேட்டதற்கு இது எனது இடம் என்று கூறி வருகிறார். எனவே அந்த நபரிடமிருந்து , இடங்களை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் 5 மணி நேரம் விசாரணை
    • மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.

    நாகர்கோவில்

    வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ரா பணியில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவரி டம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிய வந்தது.

    அவரது கையில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். மேலும் அவரது மேஜை டிராயர் மற்றும் பேக்கில் இருந்த பணத்தை யும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.17,853 பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் அந்த பணத்திற்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை யும் லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர். அப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த பல ஆவணங்கள் கிடப்பில் இருந்தது தெரிய வந்தது. 34 பேர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது தொடர்பான விபரங் களை கிராம நிர்வாக அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண் ணப்பிக்கப்பட்ட பட்டா மாறுதல் ஆவணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.

    5 மணி நேரம் நடந்த இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. கிராம நிர்வாக அலுவலகத்தில் பணம் சிக்கியது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று

    தெரிகிறது. இதே போல் வடசேரி தெற்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் சோதனை மேற்கொண் டனர். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை.

    • கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தில் கண்டமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையும் செலுத்தி வருகின்றனர். செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பல சமயங்களில் ரசீது கொடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வாடகை தொகையை உயர்த்தி நிர்ணயித்திருப்பதாகவும், பலருக்கும் வாடகை நிலுவைத் தொகை குறைந்தபட்சம் ரூ5 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாகரூ 12 ஆயிரம் வரை இருப்பதாகவும் உடனடியாக கட்டவேண்டும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    கோவில் நிர்வாகத்தால் தற்போது சொல்லப்படும் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வீடுகளுக்கான வாடகைத்தொகையை தற்போது குடியிருப்பவரிடம் கலந்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

    50 ஆண்டுகளுக்குமேலாக குடியிருக்கும் தங்களுக்கு இதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து நியாயமான பதில் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    • அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
    • கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.

    அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.

    ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.

    கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    • திருப்பரங்குன்றம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
    • அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் தாலுகா கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல தென்பரங்கு ன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

    குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×