search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி தென்னைக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை- அமைச்சர் பேச்சு
    X

    பகுதிநேர அங்காடியை திறந்து வைத்து அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

    பேராவூரணி தென்னைக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை- அமைச்சர் பேச்சு

    • அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்.
    • மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவி ட்டுள்ளார்.

    பட்டா இல்லாதவர்களுக்கு பேராவூரணி அருகே கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பகுதிநேர அங்காடியில் முதல் விற்பனையை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைமாணிக்கம், அருள்நம்பி, தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சேகர், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×