search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகராஜா கோவில்"

    • விழா ஏற்பாடுகள் தீவிரம்
    • தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று, தை திருவிழா.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா, கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    புஷ்பக விமானம், சிங்க வாகனம், கமல வாகனம், ஆதிசேஷ வாகனம், யானை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. மேலும் மாலை முதல் இரவு வரை கோவில் வளாகத்தில் சமய சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடை பெற உள்ளது. காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    5-ந்தேதி இரவு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சிறப்பு செண்டை மேளத்துடன் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக் கிறது. மறுநாள் (6-ந்தேதி சிறப்பு அபிஷேக ஆராத னைகள் மற்றும் சிந்தனை சொல்ல ரங்கம் போன்றவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் வைபவத்துடன் விழா நிறைவுக்கு வருகிறது.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்றுகாலை 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். கொடியேற்று விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், சுவாமி பத்மேந்திரா கோவில் மேலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுரேந்திர குமார், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் ரோசிட்டா, கலாராணி மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது

    கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் இன்னிசை கச்சேரிகள் சமய சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது .

    9-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற்பொழிவு சொல்ரலுமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. தேரேட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி 28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், கொடியேற்று பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு சிறப்புரை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, ஆன்மிக சொற்பொழிவு, 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மண்டகப்படி, 8.30 மணிக்கு சாமி வாகனத்தில் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    7-ம் நாள் விழாவான அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந்தேதி இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேர்வடம் தொட்டு இழுத்தல் (தேரோட்டம்) நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், மாலை 5 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழி, 6.15 மணிக்கு கதா காலசேபம், இரவு 7.45 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல், 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளுதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5, பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இதில் நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்கள் செய்யப்பட்டு வருகி றது. மாலையிலும் தீபாராத னைகள் நடந்து வருகிறது.

    தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர் சிலைகளுக்கு பெண்கள் மஞ்சள் பொடி தூவியும், பால் ஊற்றியும் வழிபட்டு வருகிறார்கள்.

    தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5 பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோ தனை செய்யப்பட்டு வருகி றது.

    இதே போல நாகராஜா கோவிலிலும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஸ்கேனிங் மிஷின்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அர்ச்சனை அபிஷேக டிக்கெட்டுகள் அனைத்தும் பார் கோடு மூலமாக ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கோவில் ஊழி யர்கள் செல்போனில் டிக்கெட்டை ஸ்கேனிங் செய்ய வசதியாக செல் போன் செயலியும் பயன்படு த்தப்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்கள் தங்களது செல்போனிலேயே அந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமின்றி சுசீந்தி ரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்க ளிலும் அபிஷேக டிக்கெட்டு கள் ஸ்கேனிங் மூலமாக பரிசோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து இணை ஆணையர் ஞானசேகர் கூறு கையில், தமிழகம் முழுவதும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மிஷின் மூலமாக ஸ்கேனிங் செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் முதல் கட்டமாக பெரிய கோவில்களில் இந்த ஸ்கேனிங் மிஷின் பொருத்தும் பணி நடந்தது. 54 கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகளை ஸ்கேனிங் செய்வதற்கு மெஷின் பொருத்தப்பட்டு ஊழியர்கள் அதை ஸ்கேன் செய்து வருகிறார்கள் என்றார்.

    • பிப்ரவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தே ரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச் சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழி பாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • இந்த கோவிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை அரசும், மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தொடர்பாக கோவிலை சார்ந்தவர்களும், பக்தர்களும் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    இதுதொடர்பாக நாகராஜா கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:-

    1992-ம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறேன். கலியுகத்தில் நாகராஜா இங்கு சுயம்புவாக இருக்கிறார். அதனால் ஆயில்ய நட்சத்திர தினம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நாகதோஷ பரிகாரங்கள் நடைபெறுகிறது. நாகராஜா, அனந்த கிருஷ்ணன், சிவன் ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இங்கு சைவ, வைணவ ஆராதனை நடைபெறுகிறது. துர்க்கைக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஆகம விதிப்படியும், தாந்திரீக முறைப்படியும் பூஜைகளும், நாகராஜருக்கு பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. பால்பாயாசம் நைவேத்யமாக வழங்கப்படுகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர். கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மனக்குறை

    நாகர்கோவிலைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 63) கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த புனித தலமாக நாகராஜா கோவில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலை காரணமாக நடக்கவில்லை. இது மனதுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஊர் சார்பாகவும், அனந்தகிருஷ்ணா பக்தசேவா அறக்கட்டளை சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    வருமானத்தில்...

    நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் (70) கூறியதாவது:- நான் கடந்த 60 ஆண்டுகளாக நாகராஜரை வழிபட்டு வருகிறேன். கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கு என்னை போன்ற உபயதாரர்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

    நமது வருமானத்தில் ஒரு தொகையை சாமிக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. எனவே சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ரூ.1½ கோடி மதிப்பீடு

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.1½ கோடியில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் டைல்ஸ்களை கருங்கல் தளமாக மாற்றுதல், மகாமேரு மாளிகை பழுது பார்த்தல், கிழக்கு முகப்பு மண்டபம் பழுது பார்த்தல், நாகர் சன்னதி முன்பக்க ஆனைக்கொட்டில் மண்டபம் பழுதுபார்த்தல், ஜெனரேட்டர் அறை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள், கோவில் கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது பராமரிப்பு செய்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.

    நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.

    பரிகாரத்தலம்

    நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.

    குழந்தை பாக்கியம்

    கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

    மன்னர் நோய் நீங்கியது

    இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.

    அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.

    • விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
    • 31-ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி கந்தசஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் 45-வது ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் மகாகணபதி ஹோமமும், 6 மணிக்கு கால்நாட்டும், காப்புக்கட்டும் நடந்தது.

    9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மூலவரையும், அம்பாளையும் இறை இசைப்பாடல்களுடன் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 6-வது நாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நாகராஜா திடலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சாமி ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-வது நாளான 31-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மங்கல தீபாராதனையும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது.

    • புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட்டம் அலை மோதியது
    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலை களுக்கு பாலூற்றி வழி பட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று காலை புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு நாக ராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.நடை திறந்தது முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாகராஜரை தரிசிக்க வந்திருந்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாலூற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழி பட்டனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி கள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 4 வாரங்களாக இரு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர். பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருக்கும்.
    • நாகர்சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் பொடி இட்டு வழிபட்டனர்.

    தமிழகத்தில் உள்ள நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாகவும், குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் நாகர்கோவில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான 21-ந்தேதியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். பலர் குடும்பம், குடும்பமாக வந்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

    இதனால் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடும் இடத்திலும், கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாகர்சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் பொடி இட்டு வழிபட்டனர். இதனால் பக்தர்களின் வரிசை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோவிலுக்கு வெளியே பல மீட்டர் தூரம் வரை இருந்தது. ஏராளமானோர் சிறப்பு டிக்கெட்டுகளையும் பெற்று வழிபாடுகளில் பங்கேற்றனர். அளவுக்கதிகமான கூட்டம் இருந்ததால் நேற்று மதியம் நடைசாத்துவதற்கு காலதாமதம் ஆனது.

    கூட்ட நெரிசலைப் பயன்டுத்தி பக்தர்களிடம் சமூக விரோதிகள் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை நாகராஜா கோவில் திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகராஜா திடல் பகுதிகளில் ஏராளமான திருவிழா கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு குமரி மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு ஆகியவற்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அன்னதானத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் வசந்தி (நீர்வள ஆதார அமைப்பு), தம்பிரான் தோழன் (கட்டிடம்) ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வில்சன்போஸ், வரைவுத் தொழில் அதிகாரி சதாசிவம், கண்காணிப்பாளர்கள் வில்பர்ட், பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று ஆவணி கடைசி ஞாயிறு
    • நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திரும ணங்கள் கைகூடும், தோஷங் கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழ மையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாரா தனைகளும், அபிஷேகங்களும் நடந்தது.

    கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராள மானோர் குடும்பத்தோடு கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் வளா கம் முழுவதும் பக்தர் கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    நாகர் சிலைகளை வழி படுவதற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.கோவில் வளாகத்தை விட்டு பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்கு வெளியே வரை நின்றனர். பக்தர்கள் பிளாஸ்டிக் பாக்கெட் களில் பால் ஊற்றி வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந் தது.

    இதையடுத்து பக்தர்கள் பாக்கெட் பால்களை வாங்கி கப்புகளில் ஊற்றி நாகர் சிலைகளுக்கு விட்டு வழிபட்டனர். சாமி தரிசனம் செய்வதற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந் தும் ஏராளமான பக்தர் கள் இன்று வருகை தந்திருந்தனர்.

    கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். பக்தர் களுக்கு கோவில் கலைய ரங்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருந் தது. கூட்டம் அலைமோதியதை யடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் வளா கத்திற்குள் இருசக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நாகராஜா திடலில் வாகனங்களை நிறுத்திவிட்டு தரிச னத்திற்கு வந்திருந்தனர். நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை யோரங்களில் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சிறுவர், சிறுமி கள் விளையாட்டு பொருட் களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

    ×