search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக சீட்டுகள்"

    • குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5, பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இதில் நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்கள் செய்யப்பட்டு வருகி றது. மாலையிலும் தீபாராத னைகள் நடந்து வருகிறது.

    தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர் சிலைகளுக்கு பெண்கள் மஞ்சள் பொடி தூவியும், பால் ஊற்றியும் வழிபட்டு வருகிறார்கள்.

    தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5 பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோ தனை செய்யப்பட்டு வருகி றது.

    இதே போல நாகராஜா கோவிலிலும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஸ்கேனிங் மிஷின்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அர்ச்சனை அபிஷேக டிக்கெட்டுகள் அனைத்தும் பார் கோடு மூலமாக ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கோவில் ஊழி யர்கள் செல்போனில் டிக்கெட்டை ஸ்கேனிங் செய்ய வசதியாக செல் போன் செயலியும் பயன்படு த்தப்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்கள் தங்களது செல்போனிலேயே அந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமின்றி சுசீந்தி ரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்க ளிலும் அபிஷேக டிக்கெட்டு கள் ஸ்கேனிங் மூலமாக பரிசோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து இணை ஆணையர் ஞானசேகர் கூறு கையில், தமிழகம் முழுவதும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மிஷின் மூலமாக ஸ்கேனிங் செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் முதல் கட்டமாக பெரிய கோவில்களில் இந்த ஸ்கேனிங் மிஷின் பொருத்தும் பணி நடந்தது. 54 கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகளை ஸ்கேனிங் செய்வதற்கு மெஷின் பொருத்தப்பட்டு ஊழியர்கள் அதை ஸ்கேன் செய்து வருகிறார்கள் என்றார்.

    ×