search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவி"

    • மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
    • விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பா ளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தொகுதி, பகுதி வாரியாகவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நாளை (22-ந்தேதி) காலை 11மணிக்கு உசிலம் பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட் டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா, நலத்திட்ட விழா நடைபெறு கின்றன. தெற்கு மாவட்ட பொருளாளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் மதியம் 1 மணிக்கு அன்ன தான விழா நடை பெறுகின்றன.

    மாவட்ட பிரதிநிதி கல்லணை குமார் ஏற்பாட்டில் விளாச்சேரி பகுதியில் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது.

    மேற்கு பகுதியில் மாடக்குளம் ரோகித் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளை ஞரணி, தொண்டரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, கொள்கைபரப்பு அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி விவசாய அணி நிர்வாகிகள் ஏற்பாட் டில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • திருப்பூர் சப்- கலெக்டர் அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சான்று கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.அவரிடம் அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், ஜாதி சான்று இல்லாததால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் வசிக்கும் அறிவொளி நகரில் சிறப்பு முகாம் நடத்தி நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினார். சப் -கலெக்டர் அறிவுரையின்படி நேற்று ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் வகுப்பு சான்று-9,வருமானச்சான்று- 1,குடும்ப அட்டை பெயர் சேர்ப்பு-2, வாக்காளர் அடையாள அட்டை படிவம் - 6 உள்ளிட்ட 79 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்கள் மீது ஆய்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னப்பன்,ஊராட்சி வார்டு மெம்பர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பில் 31-வது ஆண்டாக ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவிற்கு டாக்டர் சீத்தாலட்சுமி, வக்கீல் சந்திரசேகர், கவுன்சிலர்கள் குருநாதன், கார்த்திகாராணி மோகன், மீனாஆறுமுக கடவுள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் குருசாமி வரவேற்றார்.

    இதில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டுபுத்தங்களும் என 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் முனியப்பன், கேசவன், முன்னாள் கவுன்சிலர் மகாசரவணன், முருகாண்டி, ரவிக்கண்ணன், சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
    • கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.

    ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 19-ந்தேதி இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது.
    • திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    19-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோம மும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசையும், மாலை நையாண்டிமேளமும், வேல்தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், அன்னதானமும், காவடி அலங்காரமும் நடந்தது.

    21-ந்தேதி காலை தீபாராதனையும், காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி, பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந் தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல்காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர்.
    • காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    குண்டடம் :

    குண்டடத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறையின் சார்பில் 142 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 175 பட்டாக்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.அரசு பொறுப்பேற்று இரண்டு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் குறிப்பாக தாய்மார்களுக்கு அரசு பஸ் கட்டணம் இல்லாத பயணம் என்கிற திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொடுமுடி முதல் ருத்ராவதி பேரூராட்சி வரை செயல்பட்டு வருகிறது.காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

    முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ராணிப்பேட்டை விஷ்வாஸ் பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக், வடிவேலு, நிர்மலா செளந்தர், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன்,தேவி பென்ஸ் பாண்டியன், அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் வருவாய் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார். ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர சபை தலைவர் சுஜாதா வினோத், மேல்விஷாரம் நகர சபை தலைவர் முகமது அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மொத்தம் 567 பயனாளி களுக்கு தாலிக்கு தங்கம், தையல் எந்திரம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை உள்பட மொத்தம்

    ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    இதில் ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, அசோக்,வடிவேலு, நிர்மலா சவுந்தர், நகரசபை தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா நன்றி கூறினார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் செயற்கை கைகள் என மொத்தம் ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 350 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் 17 மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் வேண்டி மனு அளித்தவர்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் ஆகியவற்றையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    பின்னர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு மனுக்களை பெற்று கொண்டனர்.

    மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பணியின் போது உயிரிழந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளையும், தாட்கோ மூலம் 5 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.

    பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    மதுரை

    காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    ×