search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரேந்திர மோடி"

    • பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வாய்ப்பு.
    • மாநாட்டிற்கு தென்ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்கின்றன.

    தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ந்தேதி வரை நடக்கிறது. தென்ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி தென்ஆப்ரிக்காவின் ஜொகனெஸ்பர்க் சென்றடைந்தார். ஜோகனெஸ்பர்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவெளியினர் பிரமான்ட வரவேற்பு அளித்தனர்.

     

    பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும்.
    • தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.

    என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.

    சிறுபான்மை இயக்கங்களை அடக்க, அரசியல் காழ்புணர்ச்சியோடு விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய மொபைல் போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை.

    அமலாக்கத்துறை போல் என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கினை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ.யின் முகத்திரையை கிழிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.


    77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.

    பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.

    • பிரதமர் மோடி சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்.

    பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ஆம் தேதி தேசிய தினம் 'பாஸ்டில் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றிருந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


    பின்னர், பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கியிருந்தார்.


    இந்நிலையில் இந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


    • கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது.
    • எழுத்துக்கள் இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.

    திருப்பூர் :

    கடந்த மக்களவை தோ்தல்களைப் போல் 2024 ம் ஆண்டு தோ்தலிலும் பிரதமா் நரேந்திர மோடி வெற்றி பெறுவாா் என்று முன்னாள் பாஜக., மக்களவை உறுப்பினா் காா்வேந்தன் தெரிவித்தாா்.

    இது தொடா்பாக திருப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் சா்வதேச யோகா தினத்தை அறிவித்தது. அம்பேத்கா் பிறந்த, வாழ்ந்த, படித்த, காலமான இடம் என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கி, உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.

    இதுபோல கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மீண்டும் வெற்றி பெறுவாா் என்றாா்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
    • இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் குடியரசு தலைவரால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.


    பா.இரஞ்சித்

    இந்நிலையில், பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா.இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரவுபதி முர்மு பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு அழைக்கப்படவில்லை. கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாசாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள்.

    கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன. மேலும் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன.

    பா.ஜ.க.வின் தொடர் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார்.
    • இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.


    நரேந்திர மோடி

    இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அமீர்கான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தேசத்தின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளை பற்றி விவாதிப்பது. ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    • பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பின்னர் கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.

    கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.


    நரேந்திர மோடி -உன்னி முகுந்தன்

    இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உன்னி முகுந்தன், "நன்றி சார், 14 வயதில் உங்களைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு இப்போது உங்களைச் சந்தித்ததில் இருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வின் சிறந்த நிமிடங்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
    • பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.


    யானைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி தெப்பக்காடு பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்.ஆர்.ஆர்

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மிகச் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்... அம்மா!" என்று பதிவிட்டுள்ளார்.



    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.



    ×