search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு இயக்குனர் பா.இரஞ்சித் கண்டனம்
    X

    பா.இரஞ்சித்

    குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு இயக்குனர் பா.இரஞ்சித் கண்டனம்

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
    • இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் குடியரசு தலைவரால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.


    பா.இரஞ்சித்

    இந்நிலையில், பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா.இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரவுபதி முர்மு பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு அழைக்கப்படவில்லை. கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாசாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள்.

    கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன. மேலும் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன.

    பா.ஜ.க.வின் தொடர் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×