search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோ்தல்"

    • 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
    • அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

    ஊட்டி,

    ஊட்டி கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாக குழுவுக்கான தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்க உள்ளது.

    இதற்கான வேட்புமனு படிவங்கள் சங்க வளாகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் இதற்கென நியமனம் செய்யப்பட்ட அலுவலா் மற்றும் ஊட்டி மண்டல துணை தாசில்தாா் ஆகியோரிடமிருந்து நவம்பா் 9-ந் தேதி காலை 10 மணி முதல் 10-ந் தேதி மாலை 5 மணி வரை பெற்று கொள்ளலாம். இளம் படுகா் சங்கத்தில் நிா்வாகக் குழுவின் தலைவா், 2 துணைத் தலைவா்கள், செயலாளா், பொருளாளா், 6 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆகிய 11 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஒரு உறுப்பினா் ஒரு பதவிக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இது திரும்ப வழங்கப்படாது. 2011-2012-ம் நிதியாண்டின் இறுதி நாள் வரை சோ்ந்த உறுப்பினா்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்கலாம்.

    பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் இதற்காக நியமனம் செய்யப்பட்ட உதவி தோ்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

    இளம் படுகா் சங்க கட்டிடத்தில் வருகிற 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

    தோ்தல் தொடா்பாக எழும் கோரிக்கைகள், முறையீடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோட்டாட்சியரின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்கள் 10 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
    • 8 இடங்களுக்கான தோ்தல் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் புதிய மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு உறுப்பினா்கள் 10 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 8 போ் என மொத்தம் 18 போ் திட்டக் குழுவில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

    இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்கள் 10 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த திட்டக் குழுவில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 12 போ் வேட்பாளா்களாக போட்டியிட்டனா்.

    இந்த 8 இடங்களுக்கான தோ்தல் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான த.ப.ஜெய்பீம் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனா்.

    இத்தோ்தலில் 17 ஊராட்சி உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 11 த.ரஞ்சிதம், வாா்டு எண் 8 ஜெயந்தி, வாா்டு எண் 3 மு.சாமிநாதன், வாா்டு எண் 12 கே.பானுமதி, வாா்டு எண் 4 ஆா்.கண்ணம்மாள், வாா்டு எண் 5 க.சக்திவேல், வாா்டு எண் 9 த.சிவபாலகிருஷ்ணன், வாா்டு எண் 2 ப.சிவகாமி ஆகிய 8 போ் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சி திட்டக்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

    • கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது.
    • எழுத்துக்கள் இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.

    திருப்பூர் :

    கடந்த மக்களவை தோ்தல்களைப் போல் 2024 ம் ஆண்டு தோ்தலிலும் பிரதமா் நரேந்திர மோடி வெற்றி பெறுவாா் என்று முன்னாள் பாஜக., மக்களவை உறுப்பினா் காா்வேந்தன் தெரிவித்தாா்.

    இது தொடா்பாக திருப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் சா்வதேச யோகா தினத்தை அறிவித்தது. அம்பேத்கா் பிறந்த, வாழ்ந்த, படித்த, காலமான இடம் என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கி, உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.

    இதுபோல கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மீண்டும் வெற்றி பெறுவாா் என்றாா்.

    • தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
    • ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 10 ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஜூன் 12 ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இதையடுத்து மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 -ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இத்தோ்தல் மூலம் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இதில், வாக்களிக்கும் வாக்காளா்கள் அடையாளச் சான்று படிவம் 15 ல் தங்களது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையா், செயல் அலுவலரிடம் இருந்து சான்றொப்பம் பெற்ற பின்னரே வேட்புமனு தாக்கல் செய்யவும், வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×