search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை திருட்டு"

    • கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.
    • பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 36). இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவரது அக்காள் கணவர் தாழையூத்தை சேர்ந்த நாராயணகுமார். இவர் பாளை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் முருகசேன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த நிலையில், தனது அக்காள் கணவர் நாராயணகுமாரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக புறப்பட்டார். இதனை அறிந்த நாராயணகுமாரின் நண்பர்களான ஆட்டோ டிரைவர் தங்கதுரை, செல்வம் ஆகியோர் நாங்களும் குற்றாலம் வருகிறோம் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று மதியம் நாராயணகுமார், தங்கத்துரை ஆகியோர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றனர். அறையில் முருகசேன் மற்றும் செல்வம் மட்டுமே இருந்துள்ளனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அறையில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செல்வத்தை காணவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணகுமார், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை நடப்பதற்கு சற்று முன் வரை செல்வம் மட்டுமே முருகேசனுடன் இருந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. அதே நேரத்தில் முருகேசனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை காணவில்லை. அந்த நகை திருட்டு போயிருந்தது. ஏற்கனவே செல்வம் மீது திருட்டு, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாலும், அவர் மாயமாகி விட்டதாலும் நகைக்கு ஆசைப்பட்டு முருகேசனை அவர் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பிச்சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த விழுப்புரம் நெமிலி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவரது மனைவி காயத்ரி. கடந்த 13-ம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று புதுவை திருக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை சிகிச்சை முடிந்ததும் நெமிலியில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த நெக்லஸ், ஆரம், கம்மல், வளையல் என 20 சவரன் தங்க நகைகளும், கொலுசு உள்ளிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களும் என ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டுப் போயிருந்தது.

    சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் செல்வத்தின் வீட்டில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    அந்த கொலையில் கைதான சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்த சூர்யா, திண்டிவனம் சக்திவேல், சென்னை ஜான்சன் மற்றும் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி ஆகிய 5 பேரிடமும் எழும்பூர் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு நடத்திய விசாரணையில், 19-ம் தேதி அரங்கேற்றிய கொலைக்கு முன்னர் கடந்த 14-ம் தேதி திண்டிவனம் வந்த சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி சூர்யா ஆகிய இருவரும் திண்டிவனத்தில் உள்ள சக்திவேல் வீட்டில் தங்கி இருந்து நெமிலி சீனிவாசபுரத்தில் டிரைவர் செல்வம் வீட்டை நோட்டமிட்டு பகல் நேரத்திலேயே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி தங்கம் மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் சென்னை சென்ற ஜெகதீசன், சூர்யா திண்டிவனம் சக்திவேல் ஆகியோர் இவர்களது நண்பர் நாகவள்ளி தூண்டுதலின் பேரில் ராஜேஸ்வரியை கொலை செய்ததும் தெரிய வந்தது.

    ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்ட ஜெகதீசன் தலைமையிலான கும்பல் திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேலுடன் கலந்தாலோசித்து செலவுக்காக டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவல் குறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் அளித்த தகவலின் அடிப்படையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    • வீடு புகுந்து நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி புதுத்தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி (வயது26). மணிகண்டன் குடும்பத்து டன் வெளியூர் சென்றி ருந்தார். இதனால் தனது வீட்டின் கதவை பூட்டி மகாலட்சுமியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்தி ருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாலட்சுமி வீட்டின் கதவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    உசிலம்பட்டி குருவக் குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் அஜய் என்ற ரோகித் (21). இவர் மதுரை ஆரப்பாளை யம் மெயின் ரோட்டில் கார்ப்பரேசன் காலனி தெரு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசில் அஜய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலி பர்களை தேடி வருகின்றனர்.

    • மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 28) தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கார் டிரைவராக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பவர் பணியாற்றி வந்தார்.

    தர்மராஜ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி காரில் கொடைக்கானல் சென்றார். காரை டிரைவர் மனோஜ் ஓட்டியுள்ளார். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் ஊத்து அருகே வந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான தேனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ரமேஷ், சிவா, ஆண்டிபட்டியைச் சேர்ந்த மதன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசினர்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். அப்போது காரில் இருந்த பணம் ரூ.2 லட்சம், 1.5 பவுன் நகை ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் டிரைவர் மனோஜ் தர்மராஜிடம் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரிய வந்ததால் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து அதனை திருட திட்டம் போட்டார். அதன்படி அவர்களை வரவழைத்து பேச்சு கொடுத்து சிறிது நேரத்தில் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் மனோஜ், மணிகண்டன், சண்முகசுந்தரம், மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.
    • ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது67). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயக்கொடி தனது கழுத்தில் 5 பவுன் தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தார். சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.

    அப்போது மளிகை கடைக்கு பொருள் வாங்க ஒருவர் வந்தார். அவர் பொருளை வாங்கி சென்ற பின்பு ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் கடையில் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அந்த நகை கிடைக்கவில்லை.

    இது குறித்து ஜெயக்கொடி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கடையில் மேஜையின் மீது வைத்திருந்த தனது 5 பவுன் செயினை மளிகை பொருட்கள் வாங்க வந்த நபர் திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை :

    மயிலாப்பூரை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் பணி முடிந்து லிங்கி செட்டி தெருவழியாக நடந்து சென்றார். அப்போது மர்ம வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கவுசல்யா பணியாற்றும் அதே நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார்.
    • தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் 3 பெண்கள் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை, வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். 2 பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்காக ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார். அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மற்ற 2 பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

    3 பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ்சில் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது 3 பேரும் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடி சென்ற 3 பெண்களை தேடிச் சென்றார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள், எங்களது நகைக்கடையில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாராபுரம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. தொழிலாளி. இவரது மனைவி அண்ணம்மாள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக 21 பவுன் நகை சேமித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 21 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஆனால் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை.

    எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.
    • குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி பஞ்சாயத்து சவுளூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி அருள் (வயது31).

    இவர் பெங்களுரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த ஜீன் மாதம் 6-ந் தேதி ஊருக்கு வந்த அருள் தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மனைவி குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தருமபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருளின் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.

    இது குறித்து காரிமங்கலம் போலீசில் அருள் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் பேகாரஅள்ளி கூட்டுரோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனந்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (26) என்பதும், கடந்த 6-ந் தேதி அருள் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருடியதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேக்கரி கடையில் சி.சி.டி.வி. காமிரா, பெட்ரோல் பங்கில் ரூ.3 லட்சம் பணம், அருள் என்பவர் வீட்டில் கொள்ளை என தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

    இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் நாகராஜ் நேற்று வழக்கம்போல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து வந்தார்.

    பின்னர் பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, கோவில் பூசாரி சாமி கருவறையில் அலங்கார பணியில் இருந்தபோது, சாமி கும்பிடுவது போல வந்த 35 வயது மர்மநபர் கருவறைக்குள் நைசாக உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் செயினை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சவுளூரைச் சேர்ந்தவர் அருண் (வயது31). இவரது மனைவி புவனேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் பெங்களூ–ருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இதற்காக 3 மாதம் ஒருமுறை தான் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். அதன்படி கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று திருவிழா பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் கோவிலுக்கு சென்றனர். மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.

    இதுகுறித்து அருண் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×