search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur robbery"

    • மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. தொழிலாளி. இவரது மனைவி அண்ணம்மாள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக 21 பவுன் நகை சேமித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 21 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஆனால் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை.

    எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார்.
    • பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு. விவசாயி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வெளியூர் சென்று இருந்தனர். துரைக்கண்ணு மட்டும் வீட்டில் இருந்தார்.

    இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக துரைக்கண்ணு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு துரைக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    தகவல் அறிந்தததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார். இந்த பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் துரைக்கண்ணு வீட்டில் பணம் இருப்பதை அறிந்த மர்மகும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதனால் இந்த கொள்ளையில் ஈடுபட்டது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மணலி புதுநகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
    • பாக்கியவதி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இரண்டு செல்போன்கள், பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் மோகன் ஆல்டிரின், தனியார் கம்பெனி பொறியாளர். இவரது மனைவி பாக்கியவதி. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகள் மாலையில் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

    தகவல் அறிந்ததும் பாக்கியவதி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இரண்டு செல்போன்கள், பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள ஆயலூர் கிராமம், மேலாண்டை தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். விவசாயி. இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருமுல்லைவாயலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பதுதெரிந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.
    • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (வயது50). பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு கடந்த 8-ந்தேதி காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

    உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து மாரியம்மாள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர்.
    • சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(34) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு திருவேற்காடு அருகே பருத்திப்பட்டு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆட்டோ மீது தங்களது மோட்டார் சைக்கிளை மோதினர். பின்னர் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவர் பாலமுருகனிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து அறிந்ததும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கடத்தப்பட்ட ஆட்டோவை தேடிய போது அது திருவேற்காடு பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்டோவை மீட்க சென்றபோது அங்கிருந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாவும் தெரிகிறது.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், சங்க நிர்வாகிகள் திருவேற்காடு பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • கொள்ளை குறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவர் திருக்கோவில் அருகே குளக்கரை சாலையில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்து மடத்தை மூடி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மடத்திற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை வருகின்றனர்.

    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • கொள்ளை குறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், அம்மன் அவென்யூ, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனிடாஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் செங்குன்றத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பெண்மணி வாங்கி கொடுத்த உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
    • அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை பெண் திருடிச் சென்றுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.

    இதனையடுத்து எரையூர் கிராமத்தில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்முகம், அவரது மனைவி சிவசக்தி ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.

    அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார்.

    இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

    அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார்.

    இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு காந்திப்பேட்டையில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள கம்பெனியின் கிளைக்கு லாரி மூலம் பேண்ட் துணி ஏற்றி அனுப்பி வைப்பது வழக்கம்.

    அந்த லாரியை கடந்த 15 ஆண்டுகளாக காந்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவுரி முருகன் என்பவர் ஓட்டிச் செல்வார். ஆனால் காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் அருள்ஜோசப் மப்பேடு போலீசில் டிரைவர் கவுரி முருகன் மீது புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×