search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Jewelry Robbery"

    • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி வி.கே.வி.நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (70).

    இவர் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் மாதந்தோறும் பவுர்ணமியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அம்மன் கோவிலுக்கு மனைவியுடன் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று பவுர்ணமியையொட்டி மாலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி சுந்தரம் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து உடனடியாக மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    • துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார்.
    • பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு. விவசாயி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வெளியூர் சென்று இருந்தனர். துரைக்கண்ணு மட்டும் வீட்டில் இருந்தார்.

    இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக துரைக்கண்ணு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு துரைக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    தகவல் அறிந்தததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார். இந்த பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் துரைக்கண்ணு வீட்டில் பணம் இருப்பதை அறிந்த மர்மகும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதனால் இந்த கொள்ளையில் ஈடுபட்டது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×